Wednesday, June 24
Shadow

கேரளாவில் இருமுகன் படைத்த சாதனை

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், கருணாகரன் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இரு முகன். இப்படத்தில் ‘சியான்’ விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

நேற்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியான அதிகளவில் பாசிட்டிவ்வாகவும் குறைந்த அளவில் நெகட்டிவ் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது.

மலையாளத்தில் நேற்று ஆறு பெரிய படங்கள் வெளியாவதாக இருந்தது. ஆனால் இரு முகன் வருகையை தொடர்ந்து, ஆறு என்றிருந்த எண்ணிக்கை இரண்டாக மாறியுள்ளது. ‘ஐ’ படத்தின் மூலம் கேரளாவில் விக்ரமுக்கு தனி மார்கெட் உருவானது இங்கே குறிப்பிடத்தக்கது.

Leave a Reply