
தளபதி விஜய் கத்தி, துப்பாக்கி படங்களை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
சொன்ன தேதியிலும் சொன்ன நேரத்திலும் படப்பிடிப்பை ஆரம்பம் செய்வதிலில் கில்லி மாதிரி செயல்படுவது என்றால் அது இளையதளபதி தான் அதே ரசிகர்களை ஏங்கவிடாமல் படத்தை ரிலீஸ் செய்வதும் விஜய் தான் அப்படி தான் விஜய் 62 படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து தற்போது மிகவும் பரபரப்பாக போய் கொண்டு இருக்கிறது இந்த படப்பிடிப்பில் யார் கண்வைத்தார்களோ ஒரு சின்ன தடங்கல் ஏற்பட்டுள்ளது
இதனையடுத்து படக்குழுவினர் கொல்கத்தாவிற்கு சென்றனர், ஆனால் அங்கு 10 நாட்களுக்கு பிறகு படம் எடுக்க முடியாத அளவிற்கு சிக்கல்கள் உருவானதால் மீண்டும் சென்னை திரும்பினர். தற்போது காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ள ஒரு கல்லூரியில் செட் அமைத்து படம் எடுத்து வருகின்றனர்.
மேலும் கூடிய விரைவில் படக்குழுவினர் அமெரிக்காவிற்கு படையெடுக்க உள்ளனர். படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்தும் அங்கு தான் படமாக்கப்பட உள்ளதாம். மேலும் படப்பிடிப்பு காட்சிகள் ஏதும் மீண்டும் லீக் ஆகாமல் இருக்க பலத்த பாதுகாப்புகளுடம் படப்பிடிப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளாராம் முருகதாஸ்.
