
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் சினிமாத்துறையினர் சார்பில் இன்று கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற்றது. இதில் அஜித் சிம்பு கலந்து கொள்ளவில்லை என்று பலர் கூறிவருகின்றனர் ஆனால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் யாரும் கலந்து கொள்ளவில்லை அதை ஏன் யாரும் விமர்சிக்கவில்லை அஜித் வரவில்லை என்று மட்டும் விமர்சனம் செய்யபடுகிறது ஏன் இந்த போராட்டத்தில் நயன்தாரா, த்ரிஷா, கீர்த்திசுரேஷ்,சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் சினிமாத்துறையினர் சார்பில் இன்று கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட சினிமா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் நயன்தாரா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், சமந்தா உள்பட யாருமே கலந்து கொள்ளவில்லை. வரலட்சுமி சரத்குமார், தன்ஷிகா, கஸ்தூரி, ரித்விகா என சில இளம் நடிகைகளும், ஸ்ரீபிரியா, ரேகா, சத்யப்பிரியா உள்ளிட்ட மூத்த நடிகைகள் சிலருமே கலந்து கொண்டனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் பெரும்பாலானவர்கள், சென்னையில் தான் வசிக்கிறார்கள். அதுவும் கடந்த ஒரு மாதமாக படப்பிடிப்பு கூட இல்லாத நிலையில், நடிகைகள் போராட்டத்தில் கலந்து கொள்ளாதது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
அஜித் கலந்துகொள்ளதது தவறு தான் ஆனால் அஜித் எந்த நிகழ்வுக்கும் கலந்து கொள்வது இல்லை அதுவும் நாம் அறிந்த விஷயம் இந்த முக்கிய நடிகைகள் கலந்து கொள்ளவில்லை இவர்கள் அதிக சம்பளமும் அதிக ரசிகர்கள் பட்டாளமும் இவர்களுக்கும் உண்டு என்பதை நாம் மறந்து விடக்கூடாது இவர்களை கேள்வி கேட்க யாரும் இல்லையா
