Sunday, June 28
Shadow

நான்கு மொழிகளில் வெளியாகும் புருவ அழகி ப்ரியா வாரியார் படம்

பொதுவாக மலையாள படங்கள் ஒரே சமயத்தில் நான்கு மொழிகளில் ரிலீஸ் ஆன படங்கள் என்றால் சொற்பம்தான் என்று சொல்லணும் அந்த வகையில் அதுவும் மிக குறைந்த பட்ஜெட படம் இது மாதிரி நான்கு மொழிகளில் படங்கள் வெளியாவது மிக அரிது ஆனால் சமீபத்தில் தன் புருவத்தால் ஓட்டு மொத்த இந்திய சினிமாவை திரும்ப வைத்த ப்ரியா வாரியார் படம் தற்போது நான்கு மொழிகளில் வெளியாக திட்டமிட்டுள்ளனர்

சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு மலையாள படத்திற்கு கேரளாவிலேயே நூறு தியேட்டர்கள் கிடைத்தால் பெரிய விஷயம் என்கிற நிலையில் நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது என்றால் அதுவும் ஒரே ஒரு நபரால் சாத்தியாமாகி இருக்கிறது என்பதால், மலையாள திரையுலகமே புருவம் உயர்த்தி பார்க்கிறது..

ஆம்.. தனது புருவங்களால் சமிஞ்ஞைகள் செய்து ஒரே பாடலில் மொழி தாண்டி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த ‘ஒரு ஆதார் லவ்’ என்கிற மலையாள படத்தை தான் மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம்.