
உதயநிதி இன்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் தொடர்ந்து சொந்த படங்களில் நடித்த உதய நிதி தற்போது வெளிபடங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் அதில்வேற்றியும் கண்டு வருகிறார்.உதயநிதி ஸ்டாலின் தற்போது சீனு ராமசாமி இயக்கி உள்ள “கண்ணே கலைமானே” படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தற்போது திரையுலக வேலை நிறுத்தம் அமுலில் இருப்பதால் தந்தையுடன் அரசியல் பணியில் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் அடுத்து இயக்குனர் அட்லியின் உதவியாளர் ஈநாக் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. காமெடி கலந்த காதல் கதை. இதில் உதயநிதியின் தந்தையாக கார்த்திக் நடிக்கிறார். ஜோடியாக மேயாதமான் படத்தில் நடித்த பிரியா பவானி சங்கரும், இந்துஜாவும் நடிக்கிறார்கள்.
ஒரே படத்தில் அறிமுமான இருவரும் தனித்தனியாக சில படங்களில் நடிக்க துவங்கி உள்ளனர். தற்போது, மீண்டும் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.
