Monday, April 20
Shadow

புருவ அழகின் அடுத்த கண் சிமிட்டல் வீடியோ தாக்குதல்

புருவ அழகி என்றாலே இன்றைய இளைஞர்கள் மனதில் ஒரு பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்து விடும் காரணம் அந்த பெண்ணின் ஸ்டைல் தான் ஆம் ப்ரியா வாரியார் அடுத்த வீடியோ பற்றிய சுவாரிசியமான தகவல் தான் உங்களுக்கு

மலையாளத்தில் தயாராகியுள்ள ஒரு ஆடார் லவ் என்ற படத்தில் தனது கண்களை சிமிட்டியபடி புதுமையான நடிப்பை வெளிப்படுத்தி பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தவர் பிரியா வாரியார். அதன்காரணமாக இணையதளத்தில் டிரண்ட்டிங்கில் இருந்த முன்னணி நடிகைகளை பின்தள்ளிவிட்டு முதலிடம் பிடித்தார் பிரியா வாரியர்.

இந்தநிலையில், அவர் கண்சிமிட்டும் இன்னொரு வீடியோவும் தற்போது இணையதளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதாவது, ஒரு சாக்லெட் விளம்பரத்தில் நடித்துள்ளார் பிரியா வாரியர். கிரிக்கெட் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விளம்பரத்தில் சாக்லெட் சாப்பிட்டபடி ஒரு இளைஞரிடம் பேசும் பிரியா வாரியர், கண் சிமிட்டல் செய்து அவரை கிறங்கடிப்பது போன்று படமாக்கப்பட்டுள்ளது.