Wednesday, October 28
Shadow

தியா – திரைவிமர்சனம் (மகுடம்) Rank 5/4

இயக்குனர் விஜய் படம் என்றாலே தரம் மட்டும் இல்லாமல் நல்ல ஒரு கருத்தையும் சொல்லுவார் இவரின் படைப்புகள் அனைத்தும் தமிழ் சினிமாவில் ஒரு முத்திரை என்றே சொல்லலாம் அப்படியான படைப்புகளை தான் இவர் கொடுத்துள்ளார் அதற்கு மேலும் மகுடம் சூட்டும் அளவுக்கு அவரின் அடுத்த படைப்பு தான் தியா

படத்துக்கு ஏற்றப தலைப்பு என்று தான் சொல்லணும் ஏற்கனவே கரு என்று இருந்த தலைப்பை ஏன் மாற்றினார் என்ற ஒரு குழப்பம் இருக்கும் இந்த படம் பார்த்தல் தான் புரியும் இந்த படத்துக்கு கரு என்ற தலைப்பும் சரி தியா தலைப்பும் மிக அருமையான ஒரு பொருத்தம் என்று தான் சொல்லணும்

லைகா புரடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் சாய் பல்லவி, நாக ஷவ்ரியா , குழந்தை வெரோனிகா மற்றும் நிழல்கள் ரவி , ரேகா சந்தானபாரதி மற்றும் பலர் நடிப்பில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் சாம் . C இசையில் இயக்குனர் விஜய் எழுதி இயக்கி இருக்கும் படம் தியா . கரு என்ற பெயரில் உருவான படமே பெயர் மாறி வந்திருகிறது .

கல்லூரியில் படிக்கிற காலத்தில் துளசியும் ( சாய் பல்லவி) கிருஷ்ணாவும் ( நாக ஷவ்ரியா) காதலிக்கிறார்கள் . உடல் தொடர்பும் ஏற்படுகிறது . அதில் துளசி கர்ப்பம் ஆகிறாள் .

விசயம் பெற்றோர்களுக்கு தெரிகிறது . கிருஷ்ணாவின் அப்பா ( நிழல்கள் ரவி) , துளசியின் அம்மா (ரேகா) மற்றும் தாய்மாமன் வாசு ( ஜெயகுமார்) ஆகியோருக்குள் சண்டை வருகிறது . ஒரு நிலையில் சமாதானமும் ஆகிறது .

பிள்ளைகள் படித்து முடிக்கட்டும் . அப்புறம் திருமணம் செய்து வைக்கலாம்’ என்று முடிவு எடுக்கிறார்கள் . அதே நேரம் வயிற்றில் வளரும் கருவை கலைத்து விடலாம் என்று தீர்மானிக்கிறார்கள் .

கிருஷ்ணாவின் கருத்தும் அதுவாகவே இருக்கிறது . துளசிக்கு விருப்பம் இல்லாத நிலையிலும் கரு கலைக்கப் படுகிறது .

படிப்பு முடிந்ததும் திருமணமும் செய்து வைக்கப்படுகிறது .

ஆனால் வயிற்றில் வளர்ந்த அந்த முதல் உயிரை மறக்க முடியாத துளசி, அதற்கு தியா என்று பெயர் இட்டு மனதுக்குள் வளர்க்கிறாள் . ஒரு வயதில் அது இப்படி இருக்கும் . இரண்டு வயதில் இப்படி இருப்பாள் என்று படங்களை வரைந்து வைக்கிறாள் .

ஐந்து வருடத்தில் ஓவிய தியாவுக்கு ஐந்து வயது ஆகும் நிலையில் தியா நிஜத்தில் வருகிறாள். தான் கலைக்கப்பட காரணமாக தாத்தா , பாட்டி , பாட்டியின் தம்பி என்று பலரையும் பழி வாங்குகிறாள் .

துளசி ஒரு நிலையில் இதை உணரும்போது , அடுத்து தன் மகள் பழிவாங்க இருப்பது தனது கணவனைத்தான் என்பதை உணர்கிறாள் . அதன்படியே தியா தன் தந்தையை கொல்ல களம் இறங்க , துளசி கணவனை காப்பாற்ற முயல ,

ஜெயித்தது துளசியா ? தியாவா ? தியா எனில் எப்படி? துளசி எனில் எப்படி ? என்பதே இந்த தியா .

ஆர்பாட்டம் இல்லாமல் கோரமான காட்சிகள் இல்லாமல் தேவைல்லாமல் உஸ்ஸ் ஆஸ்ஸ் என்று சதம் இல்லாமல் மிகவும் நேர்த்தியாக ஒரு பேய்ப்படம் ஆனால் திரில் மட்டும் பயம் அதிகமாகவே உள்ள ஒரு படம் ஒவ்வொருவரையும் பழி வாங்கும் விதம் மிகவும் நேர்த்தியான காட்சியமைப்புகள் என்று தான் சொல்லணும் இயக்குனரை ஒவ்வொரு காட்சிகளிலும் பாராட்டும் அளவுக்கு மிக சிறப்பாக இயக்கியுள்ளார் மிக நேர்த்தியான திரைகதை அதற்கு ஏற்ப ஒளிப்பதிவு பின்னணி இசை என்று எல்லாத்திலும் அற்புதமாக அமைதுள்ளர்கள் படத்தில் அனைவிர்ன் பங்களிப்பும் மிகஉ தான் சொல்லணும் அரும்மை குறிப்பாக களை இயக்குனர் முதல் அனைவரும் அனைவரின் பங்கும் மிக சிறப்பு

சாய் பல்லவிக்கு இது தான் முதல் படம் இருந்தும் அவரை அனைவருக்கும் பரிச்சியம் காரணம் இவரின் முதல் படம் பிரேமம் அனைவரையும் கவர்ந்த படம் அந்த படத்திலே இவர் மிக சிறந்த நடிகர் என்பதை நிருபித்துள்ளார் அதை மேலும் உறுதி செய்துள்ளார் ஒரு தாயாகவும் சரி நல்ல மனைவியாகவும் சரி நடிப்பில் அருமையான ஒரு பங்களிப்பை கொடுத்துள்ளார்.

அறிமுக நாயகன் நாக ஷவ்ரியா தமிழுக்கு கிடைத்துள்ள சிறந்த நாயகன் என்று சொன்னால் மிகையாகது அதே போல தியாவாக நடிக்கும் குழந்தை படத்தின் கதைக்கு மிக பெரிய பலம் என்று தான் சொல்லணும் இயக்குனர் விஜய் படங்களில் வரும் குழந்தைகள் அழுகு மட்டும் இல்லாமல் நடிப்பில் நம்மை வியக்க வைப்பார்கள் அப்படி தான் பேபி வெரோனிகா அழகு மட்டும் இல்லாமல் அற்புதமான நடிப்பு திரமியாமிதியான நடிப்பில் மூலம் நம்மை பிரமிக்கவைக்குறார்

மொத்தத்தில் தியா தமிழ் சினிமாவின் ஒரு மகுடம் Rank 4/5