Sunday, April 19
Shadow

இருட்டு அறையில் முரட்டு குத்து படமும் இன்றய கண்ணோட்டமும்

தமிழ் நாட்டில் பல வெள்ளிக்கிழமைகள் சீறும் சிறப்புடன் போகும்
ஆமாங்க பட ரீலிஸ் நாளாச்சே அந்த வகையில் இந்த வாரம் வெளிவந்துள்ள படம் தான்..,
இருட்டு அறையில் முரட்டு குத்து

அந்த படத்தை பற்றியே கருத்தே இப்பதிவு…,

படம் பார்த்த பலரும் படம் நல்லா இருக்கு கொடுத்த காசுக்கு ஓகே சமுக அக்கறை எல்லாம் எதிர்பார்க்க கூடாது காசு சம்பாதிக்க எடுத்துறுக்காங்க நாமலும் போனாமா வந்தோமா அப்டினு இருக்கணும் இதுவே பலரின் கருத்து இதோடு மட்டும் இல்லாமல் அனைவரும் சொல்லும் கூடுதல் தகவல் ஆண்கள் மட்டும் படம் பார்க்க செல்ல வேண்டும்

இது என்னடா நியாயம் ஏன் உங்களுக்கு மட்டும் தான் செக்ஸ் பற்றிய புரிதல் இருக்கிறதா பெண்களுக்கு இல்லையா அல்லது பெண்கள் இந்த மாதிரி அடல்ட் படம் பார்த்தால் அவர்கள் தவறான வழிக்கு சென்றுவிடுவார்கள் என்ற அசிங்க புத்தியா? இதை எப்படி எடுத்துக்கொள்வது

இதேபோல இன்னொரு நிகழ்வு கடந்த ஒருவாரமாக சமூக வலைத்தளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் ஒரு செய்தி வேலூர் கோட்டையில் நான்கு மாணவிகள் குடித்துவிட்டு கும்மாளம் நாடு என்னாத்துக்கு ஆகிறது என்பது மாதிரியான உத்தம பேச்சு என்ன ஒரு கேவலம்

ஏன் பெண்கள் குடித்தால் என்ன?
அது பெரிய தேசதூரகமா?

இதை கேட்டால் இந்தியா கலாச்சாரம் சரி உங்க வழிக்கு வாரோம் பெண்கள் குடித்தால் தவறு என விவாதம் பண்ணும் ஆண் ஆதிக்க பகுத்தறிவு அற்றவற்களே
இன்று தமிழ்நாட்டில் விற்கும் பாதி மதுக்களின் ஆலைக்கு உரிமையாளரே ஒரு பெண் அதை பற்றி எந்த அறிவில்லாத ஆண்மக்கள் கேட்டது உண்டா
எப்படி கேட்ப்பார்கள் அவர்களுக்கு தான் அறிவும் இல்லை ஆண்மையும் இல்லையே
சரி அது போகட்டும் படத்தை பற்றிய கருத்து என்று சம்மந்தமில்லாமல் பேசுகிறாய் என வினா எழுப்பும் உங்களுக்கு பதில் சொல்கிறேன்

சம்மந்தம் இருக்கு இருட்டு அறையில் முரட்டு குத்து படம் சமூக அக்கறை கொண்ட படம் தான் அதில் எந்த குழப்பமும் எனக்கு இல்லை இதில் என்ன கோபம் என்றால் சராசரி மக்களுக்கு இது கருத்துள்ள அல்லது சமூக அக்கரை இல்லா படம்மாதிரி தெரியாது அது தவறில்லை ஆனால் சமூக அக்கறை கொண்ட இந்த சமூகத்தை உற்று நோக்குகின்றன தெளிவான எண்ணங்கள் கொண்ட தொலைதூரா பார்வை கொண்டவர்களும் அதே கருத்தை சொல்லும் போதும் நிச்சயம் எனக்கு கோபம் வருகிறது ஏன் பயப்படுகிறீர்கள் உண்மையை சொல்லுங்கள்

நம் நாடு இப்பொழுது இருக்கும் நிலையில் இது போன்ற படங்கள் நிச்சயம் வேண்டும் செக்ஸ் பற்றிய புரிதல்கள் அவசியம் அனைவராலும் உணரவேண்டும்
அதற்காக செக்ஸ் பற்றிய டாக்குமெண்டரி படம் எல்லாம் எடுத்தால் யாரை கவரும் இது மாதிரி படங்களின் மூலமே செக்ஸ் பற்றிய புரிதலை ஏற்படுத்த முடியும்

அதோடு இந்த மாதிரி படங்கள் எடுப்பது பார்பது இது எல்லாம் மிகப்பெரிய தவறு என்று ஏன் கற்பிக்க படுகிறது

சரி கடைசியாக ஒன்று பொதுவாக பலரும் சமூகத்தில் தவறு செய்ய ஆண்களுக்கு தான் உரிமை உள்ளது என்று இன்றும் பேசி வருகின்றனர் அவர்களை போன்ற ஆண்களுக்கு இந்த படங்கள் தவறாகதான் தெரியும்

நான் சொல்லும் இக்கருத்து சற்று குழப்பத்தை தான் கொடுக்கும் அப்படி இருக்க அந்த குழப்பத்தை தீர்க்க ஆசையெனில் இந்த படத்தை பாருங்கள் பார்த்தாலும் முழு குழப்பமும் தீராத அப்பொழுது தெளிவாக சிந்தியுங்கள் நான் பதிவிட்ட இந்த கருத்தை மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள் அப்பொழுது மேலும் ஒரு குழப்பம் வரலாம் அல்லது தெளிவு பெறலாம் குழம்பியவர்கள் என் இன்பாக்ஸ்க்கு வாருங்கள் தெளிவானர்கள் குழம்பியுள்ளவல்களை தெளிவுபடுத்துங்கள்

-கிருஷ்ணா புத்திரன்