Saturday, April 18
Shadow

இரும்புதிரை – திரைவிமர்சனம் Rank 3.5/5

விஷால் தமிழ் சினிமாவின் முக்கிய புள்ளி காரணம் நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் இந்த இரண்டிலும் முக்கிய பங்கு வகிப்பவர் பர இவரின் அதிரடி திட்டங்களுக்கு எதிரி என்றும் சொல்லலாம். இதனால் இவர் நடித்த இன்று வெளியாகியிருக்கும் இரும்பு திரை படத்துக்கு பெரும் எதிரப்பு இதையும் மீறி தான் இந்த படம் வெளியானது.

பொதுவாக விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகும் படம் என்றாலே அது தரமான படமாக தான் இருக்கும் அந்த வகையில் இந்த படமும் மிகவும் தரமான சிறந்த படம் இந்த கதையும் இந்த படத்தில் நடிக்கவும் சரி தயாரிக்கவும் தில் இருக்கணும் அந்த அளவுக்கு மிகவும் மக்களின் கவனத்தையும் சரி பல கட்சியின் கவனத்தையும் சரி நிறையவே கவனிக்க வைத்துள்ள ஒரு படம் .

டிஜிடல் இந்தியா எப்படி மிளிர்கிறது என்று வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது இன்றைய டிஜிடல் சிஸ்டமால் எவ்வளவு ஆபத்து அதாவது சமூக வலைத்தளங்களில் ஏற்படும் ஆபத்து சீர் அழிவை மிக தெளிவாக வெளிச்சம் போட்டு காண்பித்து இருக்கிறார் இயக்குனர் மித்திரன் .

இந்த படத்தில் விஷால்,அர்ஜுன்,ரோபோ சங்கர், டில்லி கணேஷ்,சமந்தா மற்றும் பலர் நடிப்பில் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் யுவன் சங்கர் ராஜா இசையில் ரூபன் படத்தொகுப்பில் வெளிவந்து இருக்கும் படம் இரும்புதிரை.

மிலிட்டரி அதிகாரியாக வரும் விஷால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் அப்பா டெல்லி கணேஷ் கடன் வாங்கி ஊர் சுற்றுபர் பொறுப்பில்லாமல் இருப்பவர் அம்மா உழைப்பில் குடும்பத்தை ஒட்டும் குடும்பம் இதனால் விஷாலுக்கு தன் குடும்பத்தின் மீது பாசம் கிடையாது எப்படியாவது இந்தியாவிட்டு போய் வெளிநாட்டில் செட்டில் ஆகணும் என்ற எண்ணம் இதனால் வெளிநாட்டு பெண்கள் பின் சுற்றும் வாலிபன் ஆர்மியில் தன் கோவம் அவரை யாரையும் விட்டு வைக்கவில்லை இவர் மீது பல புகார் இதனால் மருத்துவரிடம் சென்று ஆறு வாரம் முறையாக தன்னை கோவாகாரன் இல்லை என்று நிரூபித்தால் தான் வேலை இன்று சொல்ல விஷால் மருத்துவரிடம் போகிறார்.அந்த மருத்துவர் யாரும் இல்லை சமந்தா தான்

சமந்தா உங்கள் கோவம் எல்லாவற்றையும் மறக்கவைக்கிறது அதோடு நீங்கள் உங்களையும் உங்களை சுற்றி இருப்பவர்களையும் ரசிக்கவில்லை என்று சொல்லக்கிறார் அப்போது தன் குடும்ப சூழ்நிலையால் தான் நான் இப்படி ஆகிவிட்டேன் என் அப்பா என் தங்கை மீது பாசம் இல்லாமல் போனதுக்கு காரணம் சொல்கிறார். அப்போது சமந்தா ஒரு சின்ன விஷயம் சொல்லி இதை செய்து பாருங்க உங்களுக்குள் எப்படி ஓரு மாற்றம் வரும் என்று சொல்ல அதன் படி தன் சொந்த ஊருக்கு போகிறார் அங்கு விஷாலுக்கு ஏற்படும் மாற்றம் தன் தங்கை அப்பா மீது பாசம் வருகிறது தன் தங்கை காதலிக்கும் காதலனுக்கு தங்கையை திருமணம் செய்துவைக்க முடிவுசெய்கிறார் .

ஆனால் திருமணத்துக்கு பத்து லட்சம் பணம் தேவை விஷால் உடனே சென்னை வந்து தன் மிலிட்டரி அலுவலகத்தில் லோன் கேட்கிறார்.ஆனால் இவர் முன் கோவத்தால் பல அதிகாரிகள் இவர் மீது செய்த புகாரால் லோன் கிடைக்கவில்லை இதனால் தனியார் வங்கிகளில் முயற்சி செய்கிறார் அவர்களும் கை விரிக்க என்ன செய்வது இன்று தவிக்க அந்த சமயத்தில் ஒருவர் சில போலி சான்றிதழ் கொடுத்து லோன் வாங்கி கொடுக்கிறேன் எனக்கு பத்து சதவீதம் கமிஷன் கொடுக்கணும் என்று சொல்ல விஷால் என்னால் முடியாது என்று அங்கு இருந்து விலகுகிறார் அனால் அப்பா டெல்லி கணேஷ் இப்படி வாங்கவில்லை என்றால் தங்கை திருமணம் நின்று விடும் என்று சொல்லி வாங்க கட்டயப்படுத்துகிறார் விஷாலும் வாங்க பணம் வந்த இரண்டாம் நாள் வங்கியில் இருந்த மொத்த பணமும் தன் அப்பா கணக்கில் இருந்து மாயமாக போகிறது இது எப்படி போகிறது யார் எடுத்தார்கள் தங்கை திருமணம் நடந்ததா என்பது தான் மீதி கதை

இந்த கதையை இயக்குனர் மித்திரன் மிக அற்புதமாக தன் திரைக்கதை மூலம் படத்தை மிகவும் விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார் காட்சிக்கு காட்சி நம்மை மிரட்டுகிறார் இரண்டாம் பகுதி அடுத்து என்ன அடுத்து என்ன என்று எங்கும் அளவுக்கு கதை நகருக்கிறது ஆன் லைன் மூலம் எப்படி திருடுகிறார்கள் மக்கள் எப்படி எல்லாம் இந்த டிஜிட்டல் மூலம் என்பதை பற்றி மிகவும் அருமையாக சொல்லி இருக்கிறார் அதோடு நாம் உபயோகிக்கும் ஆண்டராய்டு போன்காலால் எவ்வளவு ஆபத்து என்றும் மிகவும் தெல்ல தெளிவாக கூறியிருக்கிறார் இயக்குனர் மித்திரன்.

இந்த ஆன் லைன் திருடர்கள் தலைவன் தான் அர்ஜுன் அவர் செய்யும் திருட்டு வேலைகளை எப்படி எல்லாம் அம்பலப்படுத்துகிறார் என்பதை மிகவும் சுவாரிசமாக கூறியுள்ளார் இயக்குனர் மித்திரன் இவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம்

விஷால் எப்பவும் போல தன் பங்கை மிகவும் உணர்ந்து நடித்துள்ளார். அர்ஜுனுடன் மோதும் காட்சிகளில் மிகவும் சிறப்பாக வெளிபடுத்தியுள்ளார். அர்ஜுனுக்கு சரியான போட்டி கொடுத்துள்ளார். சமந்தா சொல்லவாவேணும் மீன் குட்டிக்கு நீச்சல் அடிக்க கத்து கொடுக்கவாவேணும் சிறப்பாக நடித்துள்ளார்.

அர்ஜுன் செம வில்லன் ஸ்டைல் வில்லன் இந்த கதாபாத்திரத்துக்கு எற்ப வில்லன் என்று தான் சொல்லணும் விஷாலுக்கு செம போட்டியான வில்லன் என்று சொல்லணும் அதே போல காட்சிக்கு காட்சி இருவருக்கும் ஒரு நடிப்பு மற்றும் ஸ்டைல் போட்டி தெரிகிறது .

படத்துக்கு மேலும் பலம் ஒளிப்பதிவும் யுவனின் இசையும் மேலும் பலம் அதே போல இயக்குனர் குழுவை மற்றும் வசனம் எழுதியவர்கள் பாராட்டனும்

இந்த வார ரிலிஸில் சிறந்த படப்பட்டியளில் இரும்புதிரையும் உள்ளது மொத்தத்தில் இந்த இரும்புதிரை மக்களின் கோட்டை Rank 3.5/5