Wednesday, June 24
Shadow

நடிகை லக்ஷ்மி மேனன் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யபோகும் ‘எங் மங் சங்’.

கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமிமேனன் சில வருடங்களுக்கு முன்புவரை முன்னணி நடிகையாக விளங்கினார். றெக்க, மிருதன் படங்களுக்குப் பிறகு தமிழ்சினிமாவிலிருந்தே காணாமல்போய்விட்டார்.

தற்போது அவர் நடித்துவரும் ஓரே படம் -‘எங் மங் சங்’.

எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் பிரபுதேவா, நடிப்பில் உருவாகிவரும் படம் இது.

’மெர்க்குரி’, ’சார்லி சாப்ளின் 2’ படங்களை தொடர்ந்து, ‘எங் மங் சங்’ படத்திலும் நடித்து வந்தார் பிரபுதேவா.

கும்பகோணம் பகுதியில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் ‘லஷ்மி’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘ஊமை விழிகள்’ என பிரபுதேவா அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். எனவே பல மாதங்களாக முடங்கிக்கிடந்தது ‘எங் மங் சங்’ படம். பிறகு தற்போது மீண்டும் ‘எங் மங் சங்’ படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

தற்போது மீண்டும் வளரத்தொடங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சத்தியமங்கலத்தில் நடந்து வருகிறது.

எங் சங் மங் படம் வெற்றியடைந்தால் லட்சுமி மேனன் இன்னொரு ரவுண்ட் வர வாய்ப்பிருக்கிறது. இல்லை என்றால் கஷ்டம்தான்