
சிவா இயக்கத்தில் அஜித் விசுவாசம் என்ற படத்தில் நடிக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் வேகமாக நடந்து வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்புகள் எங்கு நடக்கும் என்பது தெரியவில்லை.
இந்த நேரத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைக்கும் பிருந்தா, விசுவாசம் படத்தில் 2 பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். ஒன்று மான்டெஜ் பாடலாகவும், மற்றொன்று பாடல் முழுவதும் நடனம் இருக்கும்படியான பாடலாகவும் இருக்கும். அஜித் இதில் மற்றவர்களை கவரும் வண்ணம் பணியாற்றியுள்ளதாகவும், அவருடைய எளிமை கண்டு வியந்து போய்விட்டதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
