Wednesday, April 22
Shadow

காலா – திரைவிமர்சனம் (மக்களின் மைந்தன்) Rank 3.5/5

காலா ரஜினிகாந்த் வாழ்கையில் மறக்கமுடியாத ஒரு படம் என்று சொன்னால் மிகையாகது எத்தனை தடங்கள் எதிர்ப்புகள் இவை அனைத்தையும் மீறி வெளியாகியுள்ள ஒரு படம். நிலம் நம் உரிமை என்ற கொள்கையை சொல்லும் படம் முழுக்க முழுக்க ரஞ்சித் படம் என்று சொன்னால் மிகையாகது அதற்காக ரஜினியின் பங்கு இல்லை என்று சொல்லமுடியாது ரஜினியின் ஸ்டைல் மாஸ் சண்டை பன்ச் வசனங்கள் இவை அனைத்தும் கடந்த கபாலியை விட அதிகம் அதை சூப்பர் ஸ்டார் தனக்கான பங்கில் அருமையாக செய்துள்ளார்.

முழுக்க முழுக்க பல முக்கிய பிரச்சனைகளை மையாமாக வைத்து கதைக்களம் அமைத்துள்ளார் இயக்குனர் ரஞ்சித் முதல் காட்சியிலே ரஞ்சித் முத்திரை பதித்து விட்டர் என்று சொன்னால் மிகையாகது.படத்தில் பலரின் பங்கு மிக அருமையாக தெரிகிறது முக்கியமாக கலை இயக்குனர் அடுத்து ஒளிப்பதிவாளர் பின்னர் மற்ற நட்சத்திரங்கள் சரி படத்தை பற்றியும் நடித்தவர்களை பற்றியும் பார்ப்போம் .

காலா இந்த படத்தில் ரஜினிகாந்த் ஈஸ்வரி ராவ் , நான படேகர் ,ஹும குரேஷி , சமுத்திரக்கனி,சம்பத்ராஜ், சாயாஜி ஷிண்டேஅஞ்சலி பட்டில்,திலிபன், ரமேஷ் திலக், அருள் தாஸ், சாக்க்ஷி அகர்வால்,அருந்ததி, சிங்கப்பூர் சுகன்யா மற்றும் பலர் நடிப்பில் முரளி ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இசையில் ராமலிங்கம் கலை இயக்கத்தில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் காலா

காலா என்கிற கரிகாலன் மும்பையில் உள்ள தமிழர்கள் அதிகம் வாழும் பகுதில் தன் குடும்பத்துடன் வாழும் மனிதர் இந்த தாராவி மக்களின் பாதுகாவலன் மக்களின் சந்தோசமே என் சந்தோசம் என்று வாழும் காலா ஆனால் பிரபல அரசியவ்வாதி நானே படேகர் இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அங்கு இருக்கும் மொத்த இடத்தை தன் சுயலாபதுக்கு பயன்படுத்த திட்டம் போடுகிறார் இதை எப்படி காலா என்கிற கரிகாலன் முறியடிக்கிறார் என்பது தான் கதை

படம் படு வேகம் என்று சொல்லலாம் அந்த அளவுக்கு திரைகதை அமைத்துள்ளார் இயக்குனர் ரஞ்சித் குறிப்பாக இரண்டாம் பாகம் அதுவும் நானே படேகர் வந்ததும் படம் இன்னும் சுவாரியசம் இயக்குனர் ரஞ்சித்யின் திரைகதை படத்துக்கு பலம் பல நிகழ்வுகளை உள் நிறுத்தி திரைக்கதையில் புதுமை படுத்தியுள்ளார். படத்தின் பலம் என்றால் நிச்சயம் நானே படேகர் என்று சொல்லலாம் வேறு யாரு இந்த கதாபாத்திரம் நடித்து இருந்தால் படம் ரிசல்ட் வேறு மாதிரி அமைந்து இருக்கும்

ரஜினி நண்பர்களாக வரும் சமுத்திரகனி தனது பாணியில் இருந்து சற்று விலகி மிகவும் எதார்த்தமான ஒரு நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் கூடுதல் பலமும் சேர்ந்துள்ளார்.

படத்தின் அடுத்த மிக பெரிய பலம் ஈஸ்வரி ராவ் ரஜினியின் மனைவியாக படம் முழுக்க தெறிக்க வைத்துள்ளார் இந்த கதபாதிரதுக்கு இயக்குனரின் சாய்ஸ் மிக அருமைஅடேங்கப்பா ஒவ்வொரு காட்சியும் பிரமிக்கவைதுள்ளார் பல காட்சிகளுக்கு பலம் சேர்த்துள்ளார் சில இடங்களில் எல்லோரையும் தூக்கிசாப்பிட்டுள்ளார்.

அதே போல ரஜினி பேசும் வசனம் போல என் தளபதி என்று சொல்லும் அளவுக்கு நடிப்பிலும் சரி சண்டை காட்சிகளிலும் சரி மிளிர்கிறார்

அட என்னப்பா எல்லோறரை பத்தியும் சொல்லுரிங்க ஆனால் தலைவரை பத்தி சொல்லவே இல்லை அதான் மேலேயே சொல்லிட்டேனே தலைவர் பின்னி பெடல் எடுக்கிறார் குறிப்பாக நானே படேகர் காட்சிகளில் வாவ் என்று பிரமிக்கவைக்கிறார் அதோடு ஈஸ்வரி ராவ்வுடன் காதல் காட்சிகளில் ரொம்ப இளமையா தெரிகிறார்.

அதிகம் படத்தில் ஆளும் கட்சியை கொஞ்சம் கிழித்து எடுத்துள்ளார் இயக்குனர் கிளின் இந்தியா டிஜிட்டல் இந்தியா என்றும் சொல்லுவர்களுக்கு ஒரு பாடம் நம் மண் நம் நிலம் நம் உரிமை என்று படத்தின் கருவை மிக அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில் காலா மக்களின் மைந்தன் Rank 3.5/5