Saturday, June 27
Shadow

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது யார் கசிந்த உண்மை

பிக் பாஸ்2 நிகழ்ச்சி தொடங்கி 4 வது நாளை எட்டிவிட்டது. முதல் நாள் பிரம்மாண்ட ஓப்பனிங்குடன் கோலாகலமாக தொடங்கியது. கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறது.

சாப்பாடு விசயத்தில் போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவிவருகிறது. தாடி பாலாஜியின் மனைவி நித்யா மற்றவர்கள் சொல்வதை சிறுதும் எடுத்துக்கொள்ளாமல் தன் போக்கிலேயே செயல்பட்டு வருவது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் செய்த சாம்பார், ரசம், சாதம் ஆகியவற்றை அவரது கணவர் பாலாஜியும் தவிர்த்து விட்டார். அத்துடன் மற்றவர்களுக்கும் தேவையான உணவின் அளவை கவனத்தில் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அத்துடன் சமையல் குழுவின் தலைவியான மும்தாஜ்க்கும் நித்யாவுக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இதனால் சிலர் விரைவில் நித்யா வெளியேற வாய்ப்புகள் இருப்பதாக கமெண்ட் சமூகவலைதளங்களில் வந்துள்ளது.