
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிருக்கிறார். 2008-ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார். இவர் தனது 17 ஆவது வயதிலேயே தூர்தர்ஷன் மற்றும் அனைத்திந்திய வானொலி நிலையத்தின் பல நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தவர்.
திருவள்ளுவரின் உலக பொதுமறையான 1330 திருக்குறளுக்கும் இசைவடிவம் கொடுத்து பாடல்களாக உருவாக்கியுள்ளார்.
இயக்குனர் சரணுடன் இணைந்து இசையமைத்த குறிப்பிடத்தக்க பாடல்கள்
காதல் மன்னன் படத்தில் “உன்னை பார்த்த பின்பு நான்”, அமர்க்களம் படத்தில் “மகாகணபதி”, “சத்தமில்லாத தனிமை கேட்டேன்” பாடல்கள், பார்த்தேன் ரசித்தேன் படத்தில் “பார்த்தேன் பார்த்தேன்”, “கிடைக்கல கிடைக்கல” பாடல்கள், ஜெமினி படத்தில் “ஓ! போடு.. ஓ! போடு”, ஜே ஜே படத்தில் “ஜீ பூம்பா”, “நீ சூரியனை சுட்டுவிடும்” பாடல்கள், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் “சீனா தானா டோய்” பாடல்கள், அட்டகாசம் படத்தில் “அட்டகாசம்”, ‘தெக்கு சீமையில”, “தல போல வருமா” ஆகிய பாடல்கள், அசல் படத்தில் “ஏ துஷ்யந்தா’, “தெட்டொடேய்ங்” பாடல்கள்
மற்ற இயக்குனர்களுடன் இணைந்து இசையமைத்த குறிப்பிடத்தக்க பாடல்கள்
பாண்டவர் பூமி படத்தில் அனைத்து பாடல்களும், ரோஜாக்கூட்டம் படத்தில் ஆப்பிள் பெண்ணே பாடல், ஆட்டோகிராப் படத்தில் “ஒவ்வொரு பூக்களுமே” பாடல்
இவர் இசையமைத்த திரைப்படங்கள்
காதல் மன்னன், பூவேலி, அமர்க்களம், ரோஜாவனம், பார்த்தேன் ரசித்தேன், பாண்டவர் பூமி, பெண்கள், ரோஜாக்கூட்டம், ஜெமினி, தமிழ், தயா, ராஜ்ஜியம், ஜங்ஷன், ஐ லவ் யூ டா, ஜே ஜே, காதல் டாட் காம், காலாட்படை, அன்பே அன்பே, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், ட்ரீம்ஸ், ஜனனம், ஒரு முறை சொல்லிவிடு, ஆட்டோகிராப், அட்டகாசம், ஐயா, பிரியசகி, குண்டக்க மண்டக்க, பிப்ரவரி 14, இதயத் திருடன், திருப்பதி, ஜாம்பவான், உள்ள கடத்தல், திருட்டுப் பயலே, வட்டாரம், பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, முனி, வல்லமை தாராயோ, நாளை நமதே, சொல்ல சொல்ல இனிக்கும், காதலுக்கு மரணமில்லை, அசல், களவாடிய பொழுதுகள், நந்தி, அதிதி, அரண்மனை, அழகிய பாண்டிபுரம், ஆயிரத்தில் இருவர்
