Wednesday, October 28
Shadow

பின்னணிப் பாடகர் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா பிறந்த தினம்

சென்னையில் பிறந்த இவர் தென்னிந்திய மொழிகள் உட்பட 8 மொழிகளில் பாடல்களைப் பாடும் திறமையுடன் விளங்கியவர்.

கர்நாடக சங்கீதத்தின் பிதாமகனாக விளங்கியவர் இந்தியாவில் உள்ள அனைத்து கர்நாடக சங்கீத வித்வான்கள் அனைவரும் இவரை குருவாக ஏற்றுகொண்டனர் அதோடு பல விருதுகள் சங்கீதத்துக்கு வாங்கியவர்.

தென் இந்தியாவின் முக்கிய இசையைப்பளர்கள் இவரிட தான் கர்நாடக சங்கீதம் சம்பந்தமான பாடல்கள் இசைக்கு போது இவரின் அறிவுரையின்படி தான் நடப்பார்கள் மெட்டும் அமைப்பார்கள் .

ஒரு பின்னணிப் பாடகராக தென்னிந்தியத் திரைப்படங்களில் பங்களித்தார். சதி சாவித்திரி எனும் தெலுங்குத் திரைப்படத்தில் முதன்முதலாக பாடினார். பின்னணிப் பாடகி பி. லீலா இவருடன் இணைந்து பல பாடல்களை பாடியிருக்கிறார்.

சுவாதித் திருநாள் எனும் மலையாளத் திரைப்படத்தில் இவர் பாடிய பாடல்களுக்காக, கேரள அரசின் விருது இவருக்குக் கிடைத்தது.

ஆதி சங்கராச்சாரியா (சமசுகிருத மொழியின் முதல் திரைப்படம்), இராமானுஜசார்யா, மத்வச்சாரியா ஆகிய திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தார்.

பி. லீலா, மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர் சரத், இசை ஆராய்ச்சியாளர் பி. எம். சுந்தரம், நடிகர் கமல்ஹாசன், ஜெ. ஜெயலலிதா, நடிகை வைஜெயந்தி மாலா, எஸ். பி. சைலஜா ஆகியோர் இவரது மாணவர்கள் என்பது குறிப்பிடாதது.

இவர் பாடிய பாடல் இடம் பெற்ற திரைப்படங்கள்

கலைக்கோவில், திருவிளையாடல், சாது மிரண்டால், கண்மலர், கவிக்குயில், உயர்ந்தவர்கள், நவரத்தினம், நூல் வேலி, மிருதங்க சக்கரவர்த்தி, சிகரம், பசங்க, பிரபா