Wednesday, October 28
Shadow

மெல்லிசை மன்னர் எம் எஸ் விசுவநாதன் மறைந்த தினம்

இவர் கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்ரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் . விசுவநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ம. கோ. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.

இவர் நடிகராக நடித்த திரைப்படங்கள்

கண்ணகி, காதல் மன்னன், காதலா காதலா போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏ. பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ. சி. திருலோசந்தர், கே. பாலசந்தர் என்ற இயக்குநர்களுடன் அதிகமாக பணியாற்றினார். தமிழ்த் தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்தவர் விசுவநாதன். வி.குமார், இளையராஜா, அ. இ. ரகுமான், கங்கை அமரன், தேவா, யுவன் சங்கர் ராஜா, ஜி. வி. பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடினார்

இவர் இசையமைத்த திரைப்படங்களின் எண்ணிகை

தமிழ் – 800 திரைப்படங்கள்
மலையாளம் – 80 திரைப்படங்கள்
தெலுங்கு – 30 திரைப்படங்கள்
கன்னடம் – 15 திரைப்படங்கள்