Wednesday, October 28
Shadow

நடிகை வாணிஸ்ரீ பிறந்த தினம் பதிவு

இவர் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும், சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் மூன்று முறை தென்னிந்திய பிலிம்பேர் விருது, உட்பட நந்தி விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

இவர், இத்தரு அம்மாயிலு (1972), கங்கா மங்கா, சீவனா சோதி(1975), மற்றும் சில்பி கிருட்டிணடு (1978) போன்ற தெலுங்கு படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இவர் சிவாஜி கணேசனுடன் உயர்ந்த மனிதன் (1968), நிறை குடம் (1969), வசந்த மாளிகை (1972), சிவகாமியின் செல்வன் (1974), வாணி ராணி (1974) மற்றும் நல்லதொரு குடும்பம் (1979) போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

1970 களின் பிற்பகுதியில், திரைப்படங்களில் இருந்து விலகி திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 1980 களின் பிற்பகுதியில் அம்மா வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.