
எச்சரிக்கை படத்தின் கதைச்சுருக்கம்: ஒரு பெரிய பணக்காரார் ஒருவரின் மகளை இரண்டு பேர் கடத்துகின்றனர். அந்த பணக்காரர் தனது பெண்ணை கண்டிபிடித்து கொடுக்க ஒரு ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ஒருவரின் உதவியை நாடுகிறார். அவர் அந்த பணக்காரரின் மகளை எப்படி காப்பாற்றினார் என்பதே படத்தின் கதை.
எச்சரிக்கை படத்தின் விமர்சனம்
2009ம் ஆண்டில் வெளியான பிரிட்டன் படமான The Disappearance Of Alice Creed படத்தால் ஈர்க்கப்பட்டு இந்த கதையை உருவாக்கியதாக படத்தின் டைரக்டர் சர்ஜன் ஒப்பு கொண்டுள்ளார். ஆனாலும் அந்த படத்தை அப்படியே எடுக்காமல், சில மாற்றங்களையும் அவர் செய்துள்ளார்.
தேவதையை போன்ற பெண் ஒருவரை இரண்டு பேர் சேர்ந்து கடத்தி வைத்து கொண்டு அவளது தந்தையிடம் இருந்து பணம் வசூலிக்க திட்டமிடுகின்றனர். கடத்தில் ஈடுபடும் இருவரில் ஒருவர் அந்த பெண்ணுடன் ஏற்கனவே தொடர்புடைய டேவிட்(கிஷோர்), இவர் தனது உறவினரான தாமசை (விவேக் ராஜகோபால்) கொலை செய்த குற்றத்திற்காக ஜெயில் தண்டனை அனுபவித்து உள்ளார். தொடர்ந்து சிறிய சிறிய குற்றங்களில் ஈடுபட்டு வரும் அவர், விரைவில் பணம் சம்பாதிக்க நினைக்கிறார். இதற்காக ரியல் எஸ்டேட் நிறுவனர் பெருமாள்(ஜெயகுமார்) என்பவரின் மகளான சுவேதா(வரலட்சுமி)-வை கடத்த பணம் பெற முடிவு செய்து, அந்த பெண்ணை கடத்தி விடுகிறார்.
இந்நிலையில், கடத்தப்பட்டுள்ள தனது பெண்ணை கண்டுபிடித்து கொடுக்குமாறு ஓய்வு பெற்ற போலீசாரான நடராஜ்(சத்யராஜ்)-யிடம் உதவி கோருகிறார் பெருமாள். அரிய நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் தனது மகள் பிரியா-வை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ள நடராஜ், தனது வீட்டிலேயே ஒரு போலீஸ் கண்டுபிடிப்பு மையம் ஒன்றை உருவாகி, சுவேதாவை கடத்தியவர்களை, கண்டு பிடிக்க தொடங்குகிறார்.
முதல் படம் என்பதால் எச்சரிக்கை படம் திரில்லர் படமாகவே சர்ஜுன் எடுத்துள்ளார் என்று தெரிகிறது. இதில் கிரிமினல் மற்றும் போலீஸ் இடையே நடக்கும் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இது மட்டுமின்றி டேவிட் மற்றும் தாமஸ் உடனனா உறவு குறித்தும் விளக்கியுள்ளார். சுவேதா சிறப்பாக நடித்துள்ளார், நடராஜ்ஜின் மகள் குறித்த சொல்லும் நேரத்தில் படம் சிறிது வீக்காக இருந்தாலும், அது படத்தின் முதல் பாதியை பாதிக்கவில்லை. படத்தில் நடித்தவர்கள் எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர்.
ஆனால் படத்தின் இரண்டாம் பாகத்தில் டென்ட்சன் காட்சிகளில் ஏதோ குறைவது போன்றே தோன்றுகிறது. தேவையில்லாமல் டுயட் பாடல், யோகிபாபு வரும் காட்சிகள் படத்தை பலவீனமாக்கி விடுகின்றன. படத்தின் இறுதி காட்சி, பேப்பரில் எழுதியுள்ளது போன்று இல்லாமல் காட்சி அமைப்புகள் சரியாக அமையவில்லை.
மொத்தத்தில் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடுமிடம் பயமில்லை Rank 3.5/5
