Tuesday, April 21
Shadow

நடிகர் நாகார்ஜுனா பிறந்த தினம் இன்று

இவர் ஆந்திரத் திரைப்படத்துறையில் முதன்மையாக பணிபுரிகிறார், ஒரு சில பாலிவுட் மற்றும் தமிழ் படங்களிலும் பணியாற்றியிருக்கிறார்.

நாகார்ஜூனா 1959 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகேசுவர ராவ் மற்றும் அன்னபூர்ணா அக்கினேனியின் மகனாவார். அவர்களின் ஐந்து குழந்தைகளில் நாகார்ஜூனா கடைசியாவார். பின்னர் அவரது குடும்பம் ஐதராபாதத்திற்கு குடிபெயர்ந்தது அங்கு தனது ஆரம்பக் கால கல்வியை ஐதராபாத் பொதுப்பள்ளியிலும் பின்னர் பள்ளி இடைநிலைக் கல்வியை லிட்டில் பிளவர் இளநிலைக்கல்லூரியிலும் கற்றார்.


நாகார்ஜூனா இருமுறை திருமணம் செய்துள்ளார். அவரது முதல் மனைவி, லஷ்மி ராமா நாயுடுவை 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி மணந்தார். அவர் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் டி. ராமா நாயுடுவின் மகளும் தெலுங்கு திரை நட்சத்திரம் வெங்கடேசின் சகோதரியுமாவார். நாகார்ஜூனா லஷ்மியினரின் மகன் நாக சைத்தன்யா (1986 ஆம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி பிறந்த இடம் – ஹைதராபாத்) ஜோஷ் திரைப்படத்தின் மூலம் நடிக்கத் துவங்கினார், அது 2009 ஆம் ஆண்டில் செப்டம்பர் 5 ஆம் திகதி வெளிவந்தது.

பின்னர் நாகார்ஜூனா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை அமலாவை மணந்தார். அமலா இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில், ஐரிஷ் தாய் மற்றும் பெங்காலி தந்தை ஆகியோருக்கு பிறந்தார். அவரது இயற்பெயர் அமலா முகர்ஜியாகும். நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் இந்தியாவின் முன்னணி விலங்குகள் நல ஆர்வலராக உள்ளார். இருவரும் 1992 ஆம் ஆண்டில் ஜூன் 11ம் தேதி திருமணம் செய்தனர். மேலும், அவர்கட்கு அகில் எனும் பெயர் கொண்ட ஒரு மகன் உள்ளான் (1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி – பிறந்த இடம் சான் ஜோஸ், அமெரிக்க ஒன்றியம்). அகில், சிசிந்திரி எனும் படத்தில் தவழும் குழந்தையாக நடித்தார்.

இவர் நடித்த படங்கள்

விக்ரம், காப்டன் நாகார்ஜூனா, அரயான்கண்டா, மஜ்னூ, சங்கீர்த்தனா, கலெக்டர் காரி அப்பாயி, அக்னி புத்ருடு, கிரை தாதா, ஆக்ரி போராட்டம், சின்ன பாபு, முரளி கிருஷ்ணடு, ஜானகி ராமுடு, சிவன், அக்னி, கீதாஞ்சலி, விக்கி தாதா, விஜய், சிவன், நேட்டி, சித்தார்தா, இத்தரு இதாரே, பிரேம் யுத்தம், ஜயத்ரயாத்ரா, சாந்தி கிராந்தி, சைதன்யா, நிர்ணயம், பிரெசிடெண்ட் கார் பெல்லம், துரோஹி, அந்தம், குடா கவா, கில்லர், அல்லாரி அல்லுடு வரசுடு, ரக்ஷனா, கிரிமினல், ஹலோ பிரதர், கோவிந்தா கோவிந்தா, சிசிந்திரி, கிரிமினல், காரன புல்லுடு, நின்னெ பெல்லதூதா, வஜ்ரம், ராமுடோச்சடு, ரட்சகன், அன்னமய்யா, ஸாகிம், சந்தரலேகா, அங்காரே, ஆட்டோ டிரைவர், ஆவிட மா ஆவிடே, ரவோயி சந்தமாமா, சீதாராமராஜூ, ஆசாத், நின்னே பிரேமிஸ்தா, நுவ்வு வாஸ்தாவானி, ஸ்நேஹமந்தே இதேரா, ஆகாச வீதிலோ, பாவா நாச்சடு, எடுருலேனி மனிஷி, மன்மதூதூ, அக்னி வர்ஷா, சந்தோஷம், எல் ஒ சி கார்கில், சிவமணி 9848022338, மாஸ், நென்னேநானு, சூப்பர், ஸ்டைல், ஸ்ரீ ராமதாஸு, பாஸ் – ஐ லவ் யூ, டான், கிருஷ்ணார்ஜூனா, கிங், கேடி, மங்காத்தா: உள்ளே வெளியே

இவர் தயாரிப்பாளராக தயாரித்த படங்கள்

கல்யாணி, பில்ல ஸமீந்தாரு, புச்சிபாபு, பிரேம கனுகா, பிரேமாபிஷேகம், யுவராஜூ, ஸ்ரீ ரங்கநீதலு, சிசிந்த்ரி, நின்னே பெல்லதாதா, ஆஹா, ஸ்ரீ சீதாராம கல்யானம் சூடாமுராரண்டி, சந்திரலேகா, பிரேம கதா, சீதாராமராஜூ, யுவகுடு, மன்மதூதூ, சத்யம், மாஸ், சூப்பர்