
நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டி, விஷாலின் தந்தை ஆவார். இவர் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார்.

கல்லூரி படிப்பை முடித்ததும், தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்குமாறு குடும்பத்தினர் ஆலோசனை வழங்கினர். நடிகர் அர்ஜுனிடம், வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். இதுவரை கிட்டத்தட்ட இருபது படங்களில் நடித்துள்ளார்.
விஷால் 1977 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தாய்மொழி தெலுங்கு ஆகும். இவரது தந்தை தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறைகளில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கினார். இவரது தற்போது குடும்பம் சென்னையில் வசிக்கிறது. இவர் தொன் போசுகோ பள்ளியிலும் இலயோலா கல்லூரியிலும் பயின்றார்.இவரது பேராசிரியர் ச. ராஜநாயகம் அளித்த ஊக்கத்தினால் நடிக்க வந்துள்ளார்.
தற்போது இவர் தான் நடிகர் சங்கத்தின் செயலாளர் மற்றும் தமிழ் திரைப்பட சங்கத்தின் தலைவர் இவர் பொறுப்பு ஏற்ற பின் நடிகர் சங்கத்துக்கான இடம் மீட்கப்பட்டது இப்போது அவர் சொன்ன படி நடிகர் சங்க கட்டடிடம் கட்டப்பட்டு வருகிறது அதேபோல தயாரிப்பு சங்கத்துக்கும் பல நன்மைகள் செய்து வருகிறார்
சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த செயலலிதா மரணத்திற்கு பிறகு அந்த தொகுதி காலியாக இருந்தது. அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் 2017 திசம்பர் 21-ல் நடைபெற்றது. அதற்காக விஷால் வேட்புமனு தாக்கல் செய்தார். விஷால் வேட்புமனுவை சரியாக பூர்த்தி செய்யாததால் அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர்.

இவர் நடித்த திரைப்படங்கள்
காவல் கோட்டம், சண்டகோழி 2, கருப்புராஜா வெள்ளைரஜா, நாளை நமதே, இரும்பு திரை, மத கஜ ராஜா, துப்பறிவாளன், கத்திச்சண்டை, மருது, கதகளி, பாயும் புலி, தாக்க தாக்க, ஆம்பள, கதை திரைக்கதை இயக்கம், பூஜை, நான் சிகப்பு மனிதன், தீயா வேலை செய்யணும் குமாரு, சமர், பாண்டிய நாடு, பட்டத்து யானை, வெடி, அவன் இவன், தீராத விளையாட்டுப் பிள்ளை, தோரணை, சத்யம், மலைக்கோட்டை, தாமிரபரணி, சிவப்பதிகாரம், செல்லமே
இவர் தயாரித்த படங்கள்
இரும்பு திரை, துப்பறிவாளன், கத்திச்சண்டை, கதகளி, பாயும் புலி, ஆம்பள, ஜீவா, பூஜை, நான் சிகப்பு மனிதன், பாண்டிய நாடு
இவர் பாடகராக பாடல் பாடிய படம்
மத கஜ ராஜா
