
கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 -ல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். 1990-ல் வந்த “புதுவசந்தம்”, 1991 -ல் வந்த “இதயம்”, படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. “கடல் பூக்கள்” என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார்.
முரளியின் தந்தை சித்தலிங்கையா கன்னடர் ஆவார். அவர் பல படங்களைத் தயாரித்துள்ளார். முரளியின் தாயார் தமிழகத்தைச் சேர்ந்தவர். முரளிக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா, ஆகாஷ் என்ற இரு மகன்களும், காவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர். அதர்வா தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார். இவர் வண்ணார் சமுகத்தை சேர்ந்தவரவார்.[சான்று தேவை]
அதர்வா “பாணா காத்தாடி” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தில் முரளி சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார்.
இவர் சிவாஜி கணேசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ், பிரபுதேவா, சூர்யா, பார்த்திபன், மம்மூட்டி, சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடனும் மீனா, சிம்ரன், ரோஜா, தேவயானி, லைலா, ரம்பா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகளுடனும் இணைந்து நடித்துள்ளார்.
இவர் அ.தி.மு.கவில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டார். இக்கட்சிக்காகத் தேர்தலில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரமும் செய்தார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
பிரேம பர்வா, பூவிலங்கு, இங்கேயும் ஒரு கங்கை, புதியவன், பகல் நிலவு, கீதாஞ்சலி, அந்தஸ்து, அஜேயா, இளங்கன்று, புதிர், ஒரு மலரின் பயணம், மண்ணுக்குள் வைரம், காலமெல்லாம் உன் மடியில், வண்ணக்கனவுகள், வளையல் சத்தம், துளசி, அவள் மெல்ல சிரித்தால், மீண்டும் மகான், புயல் பாடும் பாட்டு, குடும்பம் ஒரு கோவில்
தப்புக்கணக்கு, தங்கமணி ரங்கமணி, கைவீசம்மா கைவீசு, நினைவுச்சின்னம், புது வசந்தம், பாலம், வெற்றிமாலை, சிலம்பு, நானும் இந்த ஊருதான், நாங்கள் புதியவர்கள், சிறையில் சில ராகங்கள், புதியக்காற்று, நம்ம ஊரு பூவாத்தா, சாமி போட்ட முடிச்சு, இதயம், குறும்புக்காரன், இரவுச்சூரியன், தங்க மனசுக்காரன், சின்ன பசங்க நாங்க, தங்கராசு, என்றும் அன்புடன், தாலி கட்டிய ராசா, மணிக்குயில், தங்கக்கிளி, மஞ்சுவிரட்டு, அதர்மம், என் ஆசை மச்சான், சத்யவான்
ஆகாயப் பூக்கள், தொண்டன், பூவே உனக்காக, பூமணி, காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், ரோஜா மலரே, காதலே நிம்மதி, தினம்தோறும், வீரத்தாலாட்டு, ரத்னா, பூந்தோட்டம், என் ஆச ராசாவே, உன்னுடன், தேசியகீதம், கனவே கலையாதே, ஊட்டி, பூவாசம், இரணியன், வெற்றிக் கொடி கட்டு, மனுநீதி, கண்ணுக்கு கண்ணாக, சொன்னால் தான் காதலா, ஆனந்தம், சமுத்திரம், அள்ளித்தந்த வானம், கடல் பூக்கள், சுந்தரா டிராவல்ஸ், காமராசு, நம்ம வீட்டு கல்யாணம், காதலுடன், அறிவுமணி, பாசக்கிளிகள், எங்கள் ராசி நல்ல ராசி, நீ உன்னை அறிந்தால், பாணா காத்தாடி
