Tuesday, October 27
Shadow

நடிகர் ஜெயம் ரவி பிறந்த தினம் இன்று

ஜெயம் ரவி எடிட்டர் மோகன் மகன் ஆவார் ஆந்திராவில் பிறந்தவர் ஆனால் சென்னையில் தான் இவரின் பள்ளி படிப்புகள் எல்லாம் அமைந்தது இவரின் அண்ணன் இயக்குனர் ராஜா இன்று தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோகளில் ஒருவராக திகழ்கிறார் ஓர் ஆண்டில் மூன்று வெற்றி படங்களை கொடுத்தவர்

ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் 2002ல் இதேபெயரில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். ஜெயம் திரைப்படத்தில் நடித்தமையால் ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார். அடுத்து எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படத்தில் நடித்தார், இப்படம் தெலுங்கில் வெளிவந்த அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி என்ற திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.