
தமிழ் சினிமாவின் சகளாகலவல்லவன் பட்டியலில் இடம் பிடித்து இருக்கும் தனுஷ் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் வட சென்னனை இந்த படம் ரசிகர்களிடம் மிக பெரிய ஒரு எதிர்ப்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது இந்த படத்தின் இசை இந்த மாதம் வெளியாகிறது. இந்த நிகழ்வை மிக பிரமாண்டமாக வெளியிட இருந்தது பட குழு அனால் தற்போது இந்த இசை வெளியீட்டில் மாற்றம் நிகழ்ந்து உள்ளது.
பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தொடர்ந்து தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் வட சென்னை. தனுஷ் உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, ராதாரவி, கிஷோர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
வட சென்னையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் நடுக்கடல் சண்டைகாட்சிகள் உட்பட ரசிகர்களுக்கு நிறைய விருந்து படைக்கும் காட்சிகள் உள்ளன.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். எட்டு பாடல்கள் உள்ளன. படத்தில் டூயட் பாடல்களே கிடையாது. சென்னை சுற்றிலும் மாண்டேஜ் பாடல்களாக வேல்ராஜ் ஒளிப்பதிவில் படம் பிடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டை செப்., 17-ல் சென்னை, கலைவாணர் அரங்கில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தனர். பா.பாண்டி படத்திற்கு பிறகு, நான் ருத்ரன் படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்புகள் திருநெல்வேலியில் இரவு, பகலாக நடக்கிறது. இதனால் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தனுஷ் பங்கேற்க முடியாத சூழல். ஆகையால் படத்தின் பாடல்களை செப்., 23-ம் தேதி, ஞாயிறு அன்று இணையதளத்தில் வெளியிடுகின்றனர்.
