
பெல்லி சோபோலு, அர்ஜுன் ரெட்டி மற்றும் கீதா கோவிந்தம் போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தேவர்கொண்டா மீண்டும் தியேடர்களுக்கு திரும்பியுள்ளார் தற்போது நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்து வரும் படத்தின் பெயர் நோட்டா. இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய் தேவர்கொண்டா தமிழ் சினிமாவில் நுழைய நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
இயக்குனர் ஆனந்த் சங்கர் இந்த படத்தை தெலுங்கு-தமிழில் மொழிகளில் இயக்கி வருகிறார். இந்த படத்தின் தமிழ் பதிப்பில், நடிகர் விஜய் தேவர்கொண்டா, தனக்கு தானே டப்பிங் பேசியுள்ளார். இதற்காகவே அவர் அதிக முயற்சிகள் செய்து தமிழ் மொழியை கற்று கொண்டுள்ளார்.
தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் இருக்கும் தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ் நாட்டில், அரசியல் விவாதங்கள் சென்று வரும் நிலையில், இந்த படம் வெளியாக உள்ளது. கூடுதலாக, இந்த படத்தின் டிரைலர், அதிக மக்களை கர்ந்துள்ளதோடு, கண்டிப்பாக பேசப்படும் படமாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
தென் இந்தியாவில் பல்வேறு படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் விஜய் தேவர்கொண்டா, நடிப்பில் வெளியான பெல்லி சோபோலு விரைவில் அமெரிக்காவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் உலகளாவிய வெளியிடு வரும் அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், வரும் அக்டோபர் 4ம் தேதி நோட்டா படத்தின் தமிழ், தெலுங்கு பிரிமியர்கள் வெளியாகிறது பொலிட்டிக்கல் திரில்ளராக வெளி உள்ள இந்த படத்தில் மெஹ்ரீன் கவுர் பிரச்டா முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். சத்தியராஜ் மற்றும் நாசர் ஆகியோரும் சப்போர்ட்டிங் ரோலில் நடித்துள்ளனர். விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது.
