
இவருடைய இயற்பெயர் காவ்யா ரமேஷ். திரையுலகிற்காக தன் பெயரை சங்கவி என மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் தொலைகாட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர். இவருடைய தந்தை மைசூர் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் மட்டும் அல்லாமல் காது, மூக்கு, தொண்டை மருத்துவரும் ஆவார். சங்கவி தன்னுடைய பள்ளி படிப்பை மைசூரில் உள்ள மரியப்பா பள்ளியில் பயின்றார்.
இவர் 1993ம் ஆண்டு அஜித்தின் முதல் படமான அமராவதியில்தான் அறிமுகமானார்.இதனை தொடர்ந்து விஜயுடன் மட்டும் ரசிகன், கோமுத்தூர் மாப்ளே உள்பட 4 படங்களில் நடித்தார். இவர் கவர்ச்சி கலந்த கதாநாயகியாக வெற்றிகரமாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மொத்தம் 90 படங்களுக்கு மேல் நடித்தார்.இவர் அந்த கால கட்டத்தில் சிறந்து விளங்கியசரத்குமார் ,தொப்பி கார்த்திக்,பிரபு,விஜய் ,அஜித் ,ராம்கி,பிரசாந்த் ,விஜயகாந்த் ,சிரஞ்சீவி ,விஷ்ணுவர்தன் (நடிகர்) கமலஹாசன் ,ரஜினி,தனுஷ் , சத்தியராஜ், ஜூனியர் என் டி ஆர் போன்ற கதாநாயகர்களுடன் நடித்தார் .
இவர் நடித்த திரைப்படங்கள்
கொளஞ்சி, ரிஷி, பகவத்சிங், எல்லாமே என் பொண்டாட்டிதான், இனி எல்லாம் சுகமே, ஆஹா என்ன பொருத்தம், மன்னவா, தினமும் என்னை கவனி, அந்திமந்திரை, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, விஷ்ணு, அன்பு மகன் , கட்டுமரக்காரன், லக்கிமேன், மண்ணுக்கு மரியாதை, முத்து குளிக்க வாரீகளா , ரசிகன், அமராவதி
