
கல்பனா ரஞ்சினி என்ற கல்பனா (அக்டோபர் 5, 1965 – சனவரி 25, 2016) திரைத்துறையில் அறிமுகமான நடிகையாவார். இவர் பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனிச்சல்ல ஞான் என்ற படத்திற்காக 60வது தேசியத் திரைப்பட விருதுகள் விழாவில், சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார்.
இவர் எம். டி. வாசுதேவன் நாயர் இயக்கிய மஞ்சு திரைப்படத்தில் 1983இல் முதன்முதலாக நடித்தார். தமிழில் சின்ன வீடு திரைப்படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்தார். 1995இல் சதிலீலாவதி என்ற திரைப்படத்திலும், பம்மல் கே. சம்பந்தம், டும் டும் டும் ஆகியத் தமிழ்த் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.2016 ஜனவரி 25-ஆம் தேதி திங்கட்கிழமை காலை ஹைதராபாத்தில் மாரடைப்பால் காலமானார். திரைப்பட இயக்குனரான அனிலை திருமணம் செய்துகொண்டார். ஊர்வசி, கலாரஞ்சினி ஆகியோர் இவரது சகோதரிகள். இவர் ஞான் கல்பனா என்றொரு மலையாள நூலை எழுதியுள்ளார்.
இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்
இதயத் திருடன், பம்மல் கே. சம்பந்தம், டும் டும் டும், சதிலீலாவதி,
