Wednesday, June 24
Shadow

நடிகர் ராமராஜன் பிறந்த தினம் இன்று

இவர், அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தார். இவர் 1998ல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

எண்பதுகளின் இறுதியில் உச்சத்தில் இருந்தவர். முதலில் உதவி இயக்குனராகவும் மற்றும் இயக்குனராகவும் இருந்து பிறகு முழுநேர நடிகரானார். இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் மதுரையில் ஒரு திரையரங்கில் ஒரு வருடம் ஓடி சாதனைப் படைத்தது.

கங்கை அமரன், ரங்கராஜன் ஆகியோர் இவரது இயக்குனர்களாக இருந்தனர்.

இவர் நடித்த புகழ்பெற்ற ஏனைய திரைப்படங்கள் – எங்க ஊரு பாட்டுக்காரன், தங்கமான ராசா, ஊருவிட்டு ஊருவந்து, வில்லுபாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, ரயிலுக்கு நேரமாச்சு போன்ற பல திரைப்படங்கள் ஆகும்.

இவர் திரைப்பட நடிகை நளினியை 1987ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அருண், அருணா என இரண்டு பிள்ளைகள் உள்ளன. பின்பு 2000 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்துப் பெற்றுக்கொண்டனர்.

டிசம்பர் 12, 2010 அன்று அதிமுக பரப்புரைக்காகத் திருநெல்வேலி செல்லும் போது மதுரை அருகே நல்லம்ம நாயக்கன் பட்டியில் சாலை ஓரப் பேருந்து நிறுத்தத்தில் மோதி இவர் சென்ற மகிழுந்து விபத்துக்குள்ளானதில் இவருக்குத் தலையிலும் காலிலும் கடுமையான காயம் ஏற்பட்டது. மகிழுந்து ஓட்டுநர் விபத்து நடந்த இடத்திலேயே இறந்தார்.