
ரமேஷ் சௌத்ரி என்றும் ஜித்தன் ரமேஷ் என்றும் அறியப்படுபவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள ஓர் நடிகராவார். இவர் தயாரிப்பாளரான ஆர். பி. சௌத்ரியின் மகனும், நடிகர் ஜீவாவின் அண்ணனும் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான ஜித்தன் என்ற படத்தில் நாயகனாக நடித்தார். பின்னர் 2011 ஆம் ஆண்டு வெளியான வானம் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளரானார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
வித்யாரத்தி, ஜித்தன், மது, ஜெர்ரி, நீ வேணும்டா செல்லம், மதுரை வீரன், புலி வருது, பிள்ளையார் தெரு கடைசி வீடு, ஒஸ்தி, ஒரு நடிகையின் வாக்குமூலம், ஜில்லா, 4த் டிகிரி, ஜித்தன் 2
