
நடிகர் மாதவன், ஆனந்த் மஹாதேவான் மற்றும் நம்பி நாராயணன் ஆகியோர் இணைந்து ‘ராக்கெட்டரி – தி நம்பி எபெக்ட் ‘ படத்தின் டீசரை அறிமுகம் செய்துள்ளனர்.
இந்திய சினிமா உலகில் முதல் முறையாக, கதைக்கு ரசிகர்களே சாட்சியாக அமைந்த ஒரு கதை உடன் உருவாக்கும் படமே ‘ராக்கெட்டரி – தி ஹம்பி எபெக்ட்’.
டிரைகலர் பிலிம்ஸ் உடன் இணைந்து வர்கீஸ் மூலன் பிச்சர்ஸ் & செப்ரான் கணேசா என்டர்டேய்ன்மென்ட் தயாரிக்கும் ‘ராக்கெட்டரி – தி நம்பி எபெக்ட்’ படம், இஸ்ரோ நிறுவனத்தில் பல்வேறு சேட்டிலைட் திட்டங்களில் பணியாற்றிய அறிவியல் அறிஞர் நம்பி நாராணனின் உண்மை கதையே தான். இந்த படத்தில் நம்பி நாராணனின் கேரக்டரில் நடிகர் மாதவன் நடிக்கிறார். இந்த படத்தை இந்திய தேசிய விருது வென்ற இயக்குனர் ஆனந்த் நாராயணன் மஹாதேவன் மற்றும் ஆர் மாதவன் ஆகியோர் இயக்குகின்றனர்.

இந்த படத்தின் டீசர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் நடிகர் மாதவன், ஆனந்த் நாராயணன் மகாதேவன் மற்றும் நம்பி நாராயணன் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆறு மாதங்களில், இந்தியா, பிரின்ஸ்டன், ஸ்காட்லாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவில் நடைபெற உள்ளது மேலும் இந்த இந்த படம் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மும்மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.
இந்த படத்தை 2019ம் ஆண்டு கோடை காலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள நடிகர் மாதவன், உலகிற்கு நம்பி நாராயணன் கதை அளிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.
இந்த விழாவில் பேசிய நம்பி நாராயணன், தனது 35 ஆண்டு காலம் ராக்கெட்டரி தயாரிப்பில் அப்துல்கலாமுடன் ம்ங்கல்யான் மற்றும் சந்திராயான் திட்டங்களில் பனியாற்றியுள்ளோன். எனது கதையை அவர்களுக்கு சொல்ல நீண்ட காலம் தேவைப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆனந்த் தெரிவிக்கையில், இந்த திரைபடம் மூலம் நம்பி நாராயணன் போன்றவர்கள் குறித்து பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். இந்த கதை படமாக்கும் போதே, நாங்கள் பாதி அறிவியல் ஆராய்ச்சியாளர்களாகவே மாறி விட்டோம். இந்த படம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச மார்க்கெட்டை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
