
கடந்த சீசன் பிக் பாஸ் முக்கிய விஷயம் என்றாலே அது ஆரவ் மற்றும் ஓவியா காதல் விவகராம் தான் என்பது உலகம் அறிந்த விஷயம் ஆனால் ஆரவ் நான் ஒவியாவை காதலிக்கவில்லை என்று கூறினார் இதனால் மனம் உடைந்த ஓவியா சில விஷயங்கள் செய்தது நமக்கு தெரியும் பின்னர் ஓவியா நானும் ஆரவை மறந்துவிட்டேன் காதலிக்கவில்லை என்று கூறினார். ஆனால் இப்போது விவகாரம் வேறு மாதிரி போகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படத்தில், துல்கர் சல்மானுடன் பணியாற்றுபவராக மிகச்சிறிய வேடத்தில் நடித்தவர் ஆரவ். அதன்பிறகு ‘சைத்தான்’ படத்தில் முகம் தெரிகிற வேடத்தில் நடித்தார். ‘ஒரு கப் காஃபி’ என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார்.
கடந்த வருடம் (2017) விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம், மிகப்பெரிய அளவில் பாப்புலாரிட்டி கிடைத்தது. அதுவும் ஆரவ் – ஓவியா காதல், இன்றளவும் பேசப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது.
கடந்த வருடம் நடைபெற்ற சீஸனில் வெற்றிபெற்று, டைட்டிலை தட்டிச் சென்றதும் ஆரவ் தான். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு பல படங்களில் அவர் ஹீரோவாக நடிப்பார், மிகப்பெரிய உயரத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ‘ராஜ பீமா’ என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் ஆரவ். நரேஷ் சம்பத் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, சைமன் கே கிங் இசையமைக்கிறார்.
இந்நிலையில், ஆரவ்-க்கு நேற்று (அக்டோபர் 31) பிறந்த நாள். இந்தப் பிறந்த நாளை, ஓவியா மற்றும் தன் நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் ஆரவ். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தங்களுக்கு இடையே காதல் இல்லை என்று இருவருமே மறுத்துள்ள நிலையில், இந்த பிறந்த நாள் புகைப்படங்கள் மறுபடியும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
