Tuesday, October 27
Shadow

நடிகர் பாலா சரவணன் பிறந்த தினம் இன்று

பாலா சரவணன் இந்திய தமிழ் நடிகர் ஆவார். இவர் விஜய் தொலைக்கட்சியில் ஒளிப்பரப்பான கள்ளி காட்டு பள்ளிக்கூடம் என்ற தொடரின் மூலம் அறிமுகமாகினார். பின்பு அதே தொலைக்காட்சியின் கல்லூரி கதையான கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை என்ற தொடரில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் பிறகு ஈகோ, குட்டி புலி போன்ற திரைப்படங்கள் மூலம் திரையுலகில் இவரும் ஓர் அங்கமானார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

மதுர வீரன், இருட்டு அறையில் முரட்டு குத்து, நகர்வலம், அதே கண்கள், கூட்டத்தில் ஒருத்தன், உள்குத்து, புருஸ் லீ, பிச்சுவா கத்தி, என் ஆளோட செருப்பை காணோம், கொடிவீரன், ராஜா மந்திரி, உன்னோடு கா, ஒரு நாள் கூத்து, வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான், டார்லிங், பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், ஆ, குட்டிப் புலி