Wednesday, October 28
Shadow

நகைசுவை நடிகை ஆர்த்தி பிறந்த தின பதிவு

ஆர்த்தி கணேஷ்கர், ஒரு தென்னிந்தியத் திரைப்பட தொலைக்காட்சி நடிகை. இவர் பல திரைப்படங்களில் நகைச்சுவையூட்டும் வேடத்தில் நடித்துள்ளார், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அசத்தப் போவது யாரு? நிகழ்ச்சியின் நடுவராகவும் உள்ளார்.. கணேஷ்கர் என்ற நகைச்சுவை நடிகரைத் திருமணம் செய்துகொண்டார். இவர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் கலந்துகொண்டு இரண்டாவது பரிசை வென்றார். இந்திய ஆட்சிப் பணியாளராக விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

1987ம் ஆண்டு வெளிவந்த வண்ணக் கனவுகள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்பட சுமார் 65 திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். குழந்தைப்பருவத்தில் சககுழந்தை நட்சத்திரமும் தற்போது இவருடைய கணவருமான கணேஷ்கரின் சகோதரியாக, என் தங்கை கல்யாணி திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ்நாட்டின் கலைமாமணி விருதினைப் பெற்றுள்ளார்.


இவர் நடித்த திரைப்படங்கள்

வண்ணக் கனவுகள், , என் தங்கை கல்யாணி, தென்றல் சுடும், சத்ரியன், காவலுக்குக் கெட்டிக்காரன், அருள், கிரி, காற்றுள்ளவரை, குண்டக்க மண்டக்க, மாயாவி, நெஞ்சிருக்கும் வரை, திருப்பதி, குஸ்தி, மலைக்கோட்டை, தாமிரபரணி, காதல் வானிலே, குருவி, மலை மலை, அடடா என்ன அழகு, வில்லு, தோரணை, ஐந்தாம் படை, புதிய பயணம், படிக்காதவன், சூரியன் சட்ட கல்லூரி, குரு என் ஆளு, குட்டி, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கு இந்த ஊரு, குரு சிஷ்யன், வீரசேகரன், தைரியம், பலே பாண்டியா, உத்தம புத்திரன், தம்பிக்கோட்டை, கந்தா, காதலுக்காக பொருத்தம், மதுவும் மைதிலியும், ஒரு முத்தம் ஒரு யுத்தம், , கழுகு, தடையறத் தாக்க, எதிர்நீச்சல், நான் ராஜாவாகப் போகிறேன், சொன்னா புரியாது, யா யா, வணக்கம் சென்னை, இங்க என்ன சொல்லுது, இது கதிர்வேலன் காதல், நான் சிகப்பு மனிதன், வெற்றிச் செல்வன், அரண்மனை, கயல், கில்லாடி, யட்சன்