
ரூபன் என்பவர் இந்திய திரைப்பட தொகுப்பாளர்(எடிட்டர்) ஆவார்.அவரது முழுப்பெயர் லிவிங்ஸ்டன் ஆண்டனி ரூபன் ஆகும்.அவர் தமிழ் திரைப்பட உலகில் பணியாற்றி வருகிரார்.
சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்மியூனிகேஷன் பட்டம் பெற்றப்பின் இயக்குனர் கெளதம் மேனனிடம் உதவியாளராக சேர அவரை அணுகினார்.ஆனால் அவர் திரைப்படத் தொகுப்பாளர் அந்தோனியிடம் உதவியாளராக சேர அனுப்பி வைத்தார்.அவர் அந்தோணியிடம் உதவி தொகுப்பாளராகவும்,திரைப்பட தயாரிப்பாளராகவும் பணிப்புரிந்து வருகிறார்.2006-ல் வேட்டையாடு விளையாடு,2010 -ல் விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களை அந்தோணியின் வழிகாட்டுதலுடன் தயாரித்துள்ளார்.ரூபனுக்கு 2009-ல் தோரணை,2011-ல் அவன் இவன் மற்றும் 2011-ல் வெடி போன்ற படங்களில் உதவி தொகுப்பாளாராக மட்டுமல்லாது இத்திரைப்படங்களுக்கு டிரைலர் தயாரித்து நிரவகிக்கும் பொறுப்பையும் வழங்கினார்.

2011-ல் கண்டேன் திரைப்படத்தை முழுவதுமாக தொகுக்கும் வாய்ப்பு வருவதற்கு முன் எல்டர் குமாரின் முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்படத்தில் ஒருமுறை பாடலில் பணியாற்றியுள்ளார்.2013-ல் வெளிவந்த ராஜா ராணி திரைப்படம் அவரது திரைப்பட வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உறுதுணையாயிருந்தது.இப்படம் வணிகரீதியாக அதிக வசூலை கொடுத்தப்படம்.இதற்குப்பின் பெரியளவு நிதி செலவிடக்கூடிய அவருக்கு கிடைத்தது.இப்படத்தில் வரும் ஓட ஓட பாடல் அவருக்கு நேர்மறையான விமர்சனத்தை வழங்கியது.மேலும் நிதிப்பற்றாக்குறை காரணமாக ஜப்பானில் படமெடுக்கவேண்டிய அங்காடி பாடலை எடுப்பதற்கு குழுவினரை சம்மதிக்க வைத்ததில் பெரும் பங்காற்றினார்.இதற்கு முந்தய திரைப்படங்களில் அந்தோணி எல்.ரூபன் என இருந்த தனது பெயரை இனிவரும் படங்களில் எடிட்டர் ரூபன் என மாற்றிக்கொண்டார்.எடிட்டர் அந்தோணி என்ற ஏற்கனவே இருப்பதால் குழப்பம் வரும் என தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

இவர் தொகுப்பாளராக பணிப்புரிந்த படங்கள்
கண்டேன், முப்பொழுதும் உன் கற்பனைகள், எடிகரிகே, சமர், ராஜா ராணி, நான் சிகப்பு மனிதன், ஜீவா, டார்லிங், இனிமே இப்படிதான், திரிஷா இல்லைனா நயன்தாரா, வேதாளம், வில் அம்பு, தெறி, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, வீர சிவாஜி, ரெமோ, ஜக்குவார், விவேகம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன், மெர்சல், ஸ்கெட்ச்
