
உதயநிதி, உங்களுக்கு ரசிகர்கள் எல்லாம் இருக்கிறார்களா? ரசிகர் கிண்டல் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் வினியோகிஸ்தர் என்று அவதாரம் எடுத்த உதயநிதியை நடிப்பு என்ற அவதாரத்தை எடுக்க பிள்ளையார் சுழி போடவைத்தது இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தான் பின்னர் நடிப்பில் இறங்கிய உதயநிதி நடிப்பில் கவனம் செலுத்த அது ஓரளவுக்கு வெற்றியும் கிடைத்தது வியாபார ரீதியாகவும் வெற்றி தான் கிடைத்தது உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்.
இவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் கஜா புயலால் மக்கள் கடுமையாக பாதிக்க தமிழகமே சோகத்தில் உள்ளது. பல நடிகர்களின் ரசிகர்கள் தாமாக முன்வந்து உதவி வருகின்றனர். இதில் உதயநிதி ரசிகர்களும் உதவ, அதற்கு உதயநிதி டுவிட்டரில் நன்றி தெரிவித்து இருந்தார், அப்போது ஒருவர் ‘உங்களுக்கு ரசிகர்கள் எல்லாம் இருக்கிறார்களா’ என்று கேட்டார். அதற்கு உதயநிதி ‘அவர்கள் என் ரசிகர்கள் இல்லை என்னுடைய நண்பர்கள் இருக்கிறார்கள்’ என கூறி பதிலடி கொடுத்தார்.

