
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மீண்டும் தளபதி இணைகிறார் கேட்கவே இந்த செய்தி எவ்வளவு இனிப்பாக இருக்கிறது இது நடந்தால் எப்படி இருக்கும் அதுவும் மிக பெரிய வெற்றிபடத்தில் ஆம் விரைவில் இயக்குனர் சங்கர் மற்றும் தளபதியிடம் இருந்து நமக்கு வரபோகும் முதல்வன் செய்தி அதுவாக இருக்கும்
ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படம் நவம்பர் 29ந்தேதி வெளியாகிறது. அதையடுத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை, மீண்டும் கமலை வைத்து இயக்குகிறார் ஷங்கர். அப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
2.0 படத்தின் புரொமோசன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் ஷங்கர், ஒரு பேட்டியில் முதல்வன் 2 படம் பற்றி பேசியிருக்கிறார். அதில் கதை அமையும் பட்சத்தில் முதல்வன் 2 படத்தை இயக்குவேன். கதைக்கு நடிகர் விஜய் சரியாக இருக்கும் பட்சத்தில், அவரை நடிக்க வைப்பேன். என் படத்தின் ஹீரோக்களை கதை தான் தீர்மானிக்கும் என கூறியுள்ளார்.
