Monday, April 20
Shadow

அஜித்தின் அடிச்சி தூக்கு சிங்கள் டிராக் வெளியான சில நேரங்களில் சாதனை

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படத்தில் வரும் அடிச்சிதூக்கு பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று இரவு 7 மணிக்கு வெளியானது. அப்டேட் எப்பொழுது வரும் அதை கொண்டாடுவோம் என்று காத்திருந்த தல ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவிட்டனர்.

அடிச்சிதூக்கு பாடல் வீடியோ வெளியான ஒரு மணிநேரத்தில் அதை 20 லட்சம் பேர் பார்த்துவிட்டனர். இதை பார்த்த சத்யஜோதி பிலிம்ஸ் அந்த சாதனையை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

அடிச்சிதூக்கு பாடல் வீடியோவுக்கு கிடைத்த லைக்ஸுகளை சமூக வலைதளங்களில் பெருமையாக பேசி வருகின்றனர் தல ரசிகர்கள். இமான் இசையில் பாடல் வித்தியாசமாக உள்ளது. விவேகாவின் பாடல் வரிகள் தெளிவாகவும், கேட்க இதமாகவும் இருக்கிறது #adichi thookku #ajith #ajithkumar #thala #viswasam