
இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 2002ம் ஆண்டு அன்பு என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2014ம் ஆண்டு அஜித் குமார் நடித்த வீரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் ‘அன்பு’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பாலா. காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.
தமிழில் அறிமுகமானாலும் படங்கள் வெற்றி பெறாததால் மலையாளப் பக்கம் போனார். ‘பிக்’பி’ என்கிற மலையாளப் படத்தில் மம்மூட்டியுடன் நடித்தார் முதல் படத்திலேயே வெற்றியும் பாராட்டும் விருதும் கிடைத்தன. அதன் பிறகு மளமளவென படங்கள். மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி, ப்ருத்விராஜ் என பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். பிறகு தனி நாயகனாகவும் நடிக்கத் தொடங்கி வெற்றி பெற்றார். ஒரே ஆண்டில் 9 படங்கள் நடிக்கும் அளவுக்குப் பரபரப்பானார். மலையாளத்தில் தொடர்ச்சியாக 40 படங்கள் நடித்துள்ளார்
மலையாளத்தில் முன்னணி நடிகராகத் திகழும் பாலா, கடந்த ஆண்டு ரிலீசான ‘வீரம்’ படத்தில் அஜித் தம்பிகளுள் ஒருவராக நடித்தார்.
பாலாவுக்கும் கேரளாவைச் சேர்ந்த அம்ருதாவுக்கும் 2010-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு அவந்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. அம்ருதா மலையாள படஉலகில் பின்னணி பாடகியாகத் திகழ்கிறார். பாலா – அம்ருதா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.
