
தமன்னா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2005ல் சாந்த் சே ரோசன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார். கல்லூரி திரைப்படம் தமனாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது. இதையடுத்து நடிகர் தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன் ஆகிய படங்களில் நடித்தார். கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா முதலிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் சிந்தி இனத்தைச் சேர்ந்தவர்.
தமன்னா 1989 ம் ஆண்டு டிசம்பர் 21 ம் தேதி சந்தோஷ் மற்றும் ரஜனி பாட்டியா ஆகியோருக்கு மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பிறந்தார். அவருக்கு ஆனந்த் என்கிற ஒரு அண்ணன் உள்ளார். அவரது தந்தை ஒரு வைர வியாபாரி ஆவார். இவர் சிந்தி வம்சா வழியைச் சேர்ந்தவர் ஆவார். அவர் மும்பையில் உள்ள மனேக்ஜி கூப்பர் கல்வி அறக்கட்டளை பள்ளி இல் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு எண்கணித காரணங்களுக்காக அவரது திரைப் பெயர் மாற்றப்பட்டது
இவர் நடித்த திரைப்படங்கள்
பொன் ஒன்று கண்டேன், கண்ணே கலைமானே, ஸ்கெட்ச், கே ஜி எஃப், பாகுபலி 2, தோழா, தர்மதுரை, கத்திச்சண்டை, தேவி, இஞ்சி இடுப்பழகி, பாகுபலி, வீரம், வேங்கை, சிறுத்தை, கோ, தில்லாலங்கடி, சுறா, பையா, படிக்காதவன், கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், அயன், வியாபாரி, கல்லூரி, எனக்கு 20 உனக்கு 18, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க
