
தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஐந்து படங்களாவது நடிக்கிறார். அதோடு வித்தியாசமான கதாபாத்திரங்கள் அதோடு அதில் அதிக வெற்றி படங்களும் ஆகும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் 2017ம் ஆண்டு இவர் நடிப்பில் கவன்,விக்ரம் வேதா,கருப்பன் ஆகிய படங்கள் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
அதே போல் இந்த வருடமும் அவர் 7 படங்களில் நடித்துள்ளார். பிரேம் குமார் இயத்தில் ‘96’, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘இமைக்கா நொடிகள்’, பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ‘சீதக்காதி’, மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’, கோகுல் இயக்கத்தில் ‘ஜுங்கா’, விக்கி இயக்கத்தில் ‘டிராபிக் ராமசாமி’ படத்தில் ஒரு சிறிய ரோல், ஆறுமுக குமார் இயக்கத்தில் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ உள்ளிட்ட படங்கள் இந்தாண்டில் வெளியாகியுள்ளது. இதில் 96, செக்க சிவந்த வானம், இமைக்கா நொடிகள் படங்கள் நல்ல வசூலை தந்தது. மற்ற படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை.
இவர் நடிப்பில் பேட்ட, சூப்பர் டீலக்ஸ், மாமனிதன், இடம் பொருள் ஏவல் உள்ளிட்ட படங்கள் அடுத்தாண்டு ரிலீசுக்காக வரிசைக் கட்டி நிற்கின்றன.
இவருக்கு அடுத்தபடியாக பிரபுதேவா, கவுதம் கார்த்திக், விக்ரம் பிரபு ஆகியோர் 3 படங்களிலும், ரஜினிகாந்த், விக்ரம், தனுஷ், விஷால், ஜெயம் ரவி ஆகியோர் 2 படங்களிலும் நடித்துள்ளனர்.மேலும் கமல்ஹாசன், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், சிம்பு, கார்த்தி, ஜீவா, ஆர்யா ஒரு படமும் வெளியாகியுள்ளது.#vijaysethupathy #2018 #best actor
