Thursday, October 29
Shadow

வரலக்ஷ்மி சொன்ன வார்த்தை உணமையாக்கிய விஷால்

செல்லமே படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி வைத்தவர் நடிகர் விஷால் தன் கடுமையான முயற்சியால் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடைத்தை பிடித்தவர் அதோடு முன்னணி நடிகர் என்ற பட்டியலில் இடம் பிடித்தார் அது மட்டுமா தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் மற்றும் நடிகர் சங்கப் பொதுச் செயலர் என்ற பதிவிக்கு நேர்மையான முறையில் தேர்வு செய்யப்பட்டவர்.

திரைப்பட உலகின் மிக முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் நடிகர் விஷாலுக்கு விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கப் போவதாக தகவல் பரவியது. ஆனால், அது பொய்யான தகவல் என திடுமென தகவல் பரவியது.

இதனால், விஷால் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியது. இந்நிலையில், இந்தக் குழப்பத்துக்கு தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார் நடிகர் விஷால்.

அவர் கூறியிருப்பதாவது:ஆந்திராவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டி – பத்மஜா தம்பதியருக்குப் பிறந்த அனிஷா ரெட்டி என்பவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். எங்கள் திருமணம், பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்ததல்ல. நாங்கள் இருவரும் ஏற்கனவே பல முறை சந்தித்து பேசி, பழகி, காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். அதை, இரு தரப்பு பெற்றோர்களிடம் சொன்னதும், யாரும் அதற்கு மறுப்பு சொல்லவில்லை. எல்லோருடைய விருப்பத்தின் பேரிலேயே காதல் திருமணம் நடக்கவிருக்கிறது. விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். அன்றைய தினம் முடிவெடுக்கப்பட்டு, திருமண தேதி அறிவிக்கப்படும்.இவ்வாறு, விஷால் கூறியுள்ளார்.

இதனால், நடிகை வரலட்சுமியை, விஷால் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவலுக்கு முற்றுப்புள்ளி விழுந்துள்ளது. அதோடு வரலக்ஷ்மி கடந்த சில நாளுக்கு முன் நானும் விஷாலும் நண்பர்கள் தான் என்று சொன்னதை உண்மையாகிய விஷால் என்று தான் சொல்லணும். #vishal #varalakshmi #love #breakup #marriage