Thursday, October 29
Shadow

நடிகை பானுப்ரியா பிறந்த தினம்

பானுப்ரியா ஒரு இந்திய நடிகை. இவர் 1980 முதல் – 1993 வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். இவர் 1990-களில் சில இந்தித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராஜமுந்திரியில் ஜனவரி 15, 1966 வருடம் பிறந்த இவர், இளமைக் காலம் முதல் சென்னையில் வசித்து வருகிறார்.
இவருடைய தங்கை நிஷாந்தி, (சாந்திப்பிரியா) என அறியப்பட்ட இவர், பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நிஷாந்தி எங்க ஊரு பாட்டுக்காரன் (1988) திரைப்படம் மூலமாக பிரபலமானார். நிஷாந்தி 2002-ம் ஆண்டு தொலைக்காட்சித் தொடரான ஆர்யமான்-லும், நடித்தார். பானுப்ரியாவின் மற்றொரு தங்கையான ஜோதிப்ரியாவும் தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
பானுப்ரியா பல மொழிகளில் சுமார் 111-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் 55 திரைப்படங்களிலும், தமிழில் 40-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களிலும், 14 இந்தித் திரைப்படங்களிலும் மற்றும் சில மலையாள மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் தன்னுடைய 17-வது வயதில் நடிக்க ஆரம்பித்தார். இவருடைய முதல் தமிழ்த் திரைப்படம், மெல்ல பேசுங்கள் 1983-ம் ஆண்டு வெளியானது. தெலுங்கில் இவர் நடித்த முதல் திரைப்படம் சித்தாரா (1983).
பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதால், பெரும்பாலான இவருடையத் திரைப்படங்களில் நடனமாடும் கதாப்பாத்திரமாகவே அமைந்தது. இவருடைய நடிப்பும் நடனமும் சக கலைஞர்களால் பாராட்டப்பட்டது. இவர் தற்போது பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய கண்களால் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சிறந்து விளங்கினார். அதன்காரணமாக இவருடைய ஐ-டெக்ஸ் (Eyetex) விளம்பரமானது மிகவும் பிரபலம்.
அமரிக்காவைச் சேர்ந்த விருதுபெற்ற புகைப்படக்கலைஞரும், பிரபல பரதநாட்டிய கலைஞரான சுமதி கவுசலின் மகனுமான ஆதர்ஷ் கவுசல், என்பவரை பானுப்ரியா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர்.
இவர் நடித்த படங்கள் 
  1. மெல்ல பேசுங்கள், தென்றல் தொடாத மலர், ஆராரோ ஆரிராரோ, சிறையில் பூத்த சின்ன மலர், புது மனிதன், கோபுர வாசலிலே, சத்ரியன், பொன்டாட்டி சொன்னா கேட்கனும், அழகன், பிரம்மா, தளபதி, தைப்பூசம், மகுடம், பரதன், தெற்கு தெரு மச்சான், சுந்தர காண்டம், பங்காளி, அமரன், காவிய தலைவன், வானமே எல்லை, நீங்க நல்லா இருக்கனும், கட்டளை, பொறந்த வீடா புகுந்த வீடா, மகராசன், முற்றுகை, கோகுலம், உழவன், ராஜ துரை, சக்ரவர்த்தி, தலைமுறை, ஆஹா, என்றென்றும் காதல், ஆனந்த பூங்காற்றே, Annai, ஸ்ரீ ராஜராஜேஷ்வரி, தாளி காத்த காளியம்மன், நைனா, ஜெய், ஜோர், செல்லமே, ஒரு பொன்னு ஒரு பையன், பொல்லாதவன் , தீக்குச்சி, என் பெயர் குமாரசாமி, 3