Sunday, June 28
Shadow

ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் பிறந்த தினம்

பி. சி. ஸ்ரீராம் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குனர் ஆவார். இவர், சென்னை திரைத்துறைப் பயிலகத்தின் மாணவர்களுள் ஒருவராவார். இவர் இயக்கிய ‘குருதிப்புனல்’ எனும் திரைப்படம், ஆஸ்கார் விருதிற்காக அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டது. இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து நாயகன், அலைபாயுதே, மௌன ராகம், அக்னி நட்சத்திரம் திரைப்படங்களில் பணியாற்றினார்.
இவரின் பூர்வீகம் பாலக்காடு. பிறந்தது 1956 இல். படித்தது வளர்ந்தது சென்னையில். இவரது பெற்றோர்: சந்திரமௌலி – சாந்தா. சென்னை திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளருக்கான பயிற்சியை முடித்தார்.
இவரது ஒன்பது வயதில் இவரின் தாத்தா பரிசளித்த ‘பிரெளனி’ கேமராவில் ஆரம்பித்தது இவரது ஒளிப்பதிவு. விளம்பரப் படங்கள், போஸ்டர்கள் என்று இவருக்கு பிடித்தமாதிரியாக இவருடைய திறமையை பயன்படுத்தி வருபவர்.
இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய படங்கள் 
யாவரும் நலம், கண்ட நாள் முதல், வானம் வசப்படும், குஷி, அலைபாயுதே, முகவரி, காதலர் தினம், முகம், குருதிப்புனல், மே மாதம், திருடா திருடா, தேவர் மகன், மீரா, கோபுர வாசலிலே, கீதாஞ்சலி, அபூர்வ சகோதரர்கள், அக்னி நட்சத்திரம், தூரத்து பச்சை, நாயகன், மௌன ராகம், பூவே பூச்சூடவா, மீண்டும் ஒரு காதல் கதை, ஒரு வாரிசு உருவாகிறது, நன்றி மீண்டும் வருக, வா இந்தப் பக்கம்