Wednesday, June 24
Shadow

நடிகர் ஆரி பிறந்த தினம் 

ஆரி ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர், இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் வெளியான ரெட்டச்சுழி (2010) திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து நெடுஞ்சாலை (2014), மாயா (2015) திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக பரவலாக அறியப்படுகிறார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களத்தில் நின்ற நடிகர் ஆரி, இப்போது விவசாயத்துக்காகக் களமிறங்கியிருக்கிறார். ‘எல்லோரும் விவசாயிகளாக மாற வேண்டும்’ என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் `மாறுவோம்… மாற்றுவோம்!’ என்ற அமைப்புக்கு ஆரிதான் விதை.
இவர் நடித்த படங்கள் 
நாகேஷ் திரையரங்கம், யூ டர்ன், உன்னோடு கா, மாயா, தரணி