Wednesday, October 28
Shadow

தளபதி 63 படத்தில் இணைந்த பிரபல அரசியவாதி

சமீபகாலமாக விஜய் படங்களில் மட்டும் இல்லை விஜயிடமும் அரசியல் தாக்கம் அதிகம் கானபடுகிறது ஆம் சர்கார் படத்தில் பழ கருப்பையா இணைந்தார் தற்போது தளபதி 63 படத்திலும் ஒரு முக்கிய அரசியவாதி இணைகிறாராம்

இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 63 படம் வேகமாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் ஒரு பாடலுக்காக, சென்னையில் இருக்கும் நேப்பியர் பாலம் போலவே பிரம்மாண்டமான செட் போடப்பட்டு, காட்சிகள் படமாக்கப்பட்டன. சென்னை, பெரம்பூர் பின்னி மில் பகுதியில் நடத்தப்பட்ட படபிடிப்பில், நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் இணைந்து, நடிகர் விஜய் நடினமாடி நடித்த, ஒரு பாடல் படமாக்கப்பட்டது. சண்டைக் காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன.

இதன் பின் தான், காதல் காட்சிகள் எடுக்கப்படவிருக்கின்றன. இதனால், விரைவில் இந்தப் பட சூட்டிங்கில் நடிகை நயன்தாரா இணையவிருக்கிறார். இந்நிலையில், ஏற்கனவே நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகி இருக்கும் எல்.கே.ஜி., படத்தில் முக்கியமான ரோலில், அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் நடித்திருந்தார்.

இதையடுத்து, அவர், விஜய் நடிக்கும் தளபதி 63 படத்திலும் நடிக்கப் போவதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அட்லியின் மேலாளர் ஒருவர் நாஞ்சில் சம்பத்திடம் பேசி, விரைவில் நீங்கள் இயக்குநர் அட்லி படத்தில் நடிக்க வேண்டியிருக்கும் என பொத்தாம் பொதுவாகச் சொல்ல, அது, நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 63 படமாகத்தான் இருக்கும் என யூக செய்திகள் சிறகடிக்கின்றன.