Saturday, April 18
Shadow

ரசிகர்களுக்காக அதிக ரிஸ்க் எடுக்கும் அஜித்

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அதோடு மிக சிறந்த பைக் ரேசர் இது மட்டும் இல்லாமல் நடிகர்களில் விமானம் ஓட்ட தெரிந்த ஒரே நடிகர் சிறந்த புகைப்பட நிபுணர் இப்படி பண் முகங்கள் கொண்ட நடிகர் இதில் பைக் ரேஸில் உலக அளவில் கலந்து கொண்டு சாதித்தவர் இதனால் மிக பெரிய விபத்துகள் இவருக்கு நடந்துள்ளது . இதனால் இவரை மருத்துவர்கள் அதிக ரிஸ்க் சண்டை காட்சிகளில் நடிக்க கூடாது என்று டாக்டர்கள் கூறியுள்ளார்கள் . இருந்தும் தன் ரசிகர்கள் சந்தோஷத்துக்கு ரிஸ்க் எடுப்பவர் அப்படி தான் இப்பவும்

 

விஸ்வாசம் படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும், நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அஜித்துடன் வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை, ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் வக்கிலாக நடிக்கிறார் அஜித். இந்த படத்திலும் ஆக்சன் காட்சிகள் உள்ளன. அஜித் வில்லனுடன் மோதும் அதிரடியான சண்டை காட்சியொன்று, தற்போது படமாகி வருகிறது. மழையில் நனைந்தபடி நடித்து வருகிறார் அஜித்.

ஏற்கனவே பலமுறை உடம்பில் அறுவை சிகிச்சை செய்து கொண்டபோதும், டூப் பயன்படுத்தாமல் இந்த சண்டை காட்சியில் அஜித்தே நடித்து வருவதாக செய்திகள் வருகின்றன