அஜித்துக்கு கை கொடுக்குமா ஆகஸ்ட் மாதம்
கார்த்தி நடித்த 'தீரன் அதிகராம் ஒன்று' என்ற படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் 'நேர்கொண்ட பார்வை' என்ற படத்தில் நடித்து வருகிறார் அஜித். அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கும் இந்தப்படத்தில் கன்னட நடிகையான ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படம் மே மாதம் வெளியாகும் என்று முதலில் அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. மே-1 ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாள் என்பதால் இந்தப்படத்தை மே-1-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டனர். படப்பிடிப்பு எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறாததினால் இப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப்போகவும் வாய்ப்புண்டு என்று சொல்லப்பட்டது.
அதன்படியே 3 மாதங்கள் கழித்து அதாவது ஆகஸ்ட் 10-ஆம் தேதி தான் 'நேர்கொண்ட பார்வை' வெளியாகும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். இதற்கிடையில் ஆகஸ்ட் மாதத்துக்கும் அஜித்துக்க...

