Monday, August 10
Shadow

சூப்பர் டீலக்ஸ் – திரைவிமர்சனம் (வரலாறு ) 4.5/5

விஜய் சேதுபதி சமந்தா ,பகத் பாசில், காயத்திரி ,மிஷ்கின் ,ரம்யா கிருஷ்ணன் இவர்களுடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.   ஆரண்ய காண்டம்” திரைப்படத்தை இயக்கியவர் தியாகராஜன் குமாரராஜா. தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார் .

படத்தின் நீளம் மூன்று மணி நேரம் என்று சொல்லும் போது நமக்கு அடப்பாவிகளா என்று சொல்ல தோன்றும் ஆனால் படம் இப்படி என்று சொல்லுவதுகுள் முடிந்து விடும் அப்படியான ஒரு திரைகதை மூன்று விதமான கதைகளை ஒரே படத்தில் காண்பித்துள்ளார் மூன்றும் மூன்று விதம் மாணவர்கள், பாரம்பரிய குடும்பம் ,மற்றும் இன்றைய கார்பரேட் குடும்பம் இதை மூன்றையும் அதோடு மத பிரச்சாரம் இவை தான் கதையின் கரு

இந்த விஷயங்களை வைத்து இயக்குனர் ஒரு அற்புதமான வித்தியாசமான திரைகதை மூலம் ரசிகர்களை மெய்மறக்க வைக்கிறார் ஆனால் இரட்டை அர்த்தத்தில் சிரிக்க வைக்கிறார் ரொம்ப விரசமாக இல்லாமல் ரசிக்கும் படிதான் அதையும் செய்துள்ளார்.

படத்தில் சமுக அக்கறை அரசியல் கம்மினுசம் என்று சிந்திக்க வைத்துள்ளார் இவைகளை திணிக்காமல் வசனங்களில் வாரி தூவியுள்ளார்  அதையும் நகைசுவையாக. கொடுத்துள்ளார்.

இயக்குனர் வேண்டுகோளுக்கு இணங்க படத்தின் காட்சிகளும் கதையும் சொல்லவில்லை சொன்னால் படம் பார்க்கும் சுவாரிசம் குறைந்து விடும் இயக்குனரின் மிக பெரிய பலம் தேர்வு செய்த நடிகர்கள் ௦வ்வொருவரும் வாழ்ந்துள்ளனர். குறிப்பாக சமந்தா பாகத் நடிப்பில் பிரமிக்க வைக்கிறார்கள் மிஸ்கின் வாழ்ந்துள்ளார் அதோடு அவருக்கான கனகச்சிதமான பாத்திரமும் படத்தில் நடித்து இருக்கும் ஐந்து மாணவர்கள் வாவ் என்று வாயை பிளக்கவைகிரார்கள்

விஜய் சேதுபதி என்னத்த சொல்லுறது சும்மா சும்மா எப்பவும் போல பின்னி இருக்கிறார் அதேபோல அவருடன் நடிக்கும் சிறுவன் விஜய் சேதுபதியை தூக்கி சாப்பிடுகிறான் காயத்திரி அனைவரும் படத்துக்கு பலம்

இயக்குனரின் எண்ணம் அறிந்து ஒளிப்பதிவாளர் ஒளி ஓவியம் தீட்டியுள்ளார் அதோடு படத்தின் லொகேஷன் பிரமிக்க வைக்கிறது ஒவ்வொரு இடமும் மிகவும் நேர்த்தியாக உள்ளது பின்னணி இசையும் பக்க பலம்

மொத்தத்தில் சூப்பர் டீலக்ஸ் தமிழ் சினிமாவின் வரலாறு Rank 4.5/5