
இந்திய சினிமாவின் பிரமாண்ட தயாரிப்பாளர் அதுவும் ஹிந்தி திரை உலகில் மிகவும் பிரபலமான தயாரிப்பாளர் போனி கபூர் இவர் தயாரிக்கும் படங்கள் பிரமாண்டம் மட்டும் இல்லாமல் சிறந்த வெற்றி படங்களாக அமையும் இவரின் தயாரிப்பில் நடிக்க பலர் காத்து உள்ளனர். இந்த சூழ்நிலையில் தல அஜித்துக்கு இவர் கொடுக்கும் கோரிக்கையை ஏற்பாரா
மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடித்த, ‘இங்கிலீஷ் விங்கிலீஸ்’ படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்தவர் அஜித். அந்தப் படத்தில் நடிக்கும் போது தங்களது பேனரில் படம் நடிக்க வேண்டும் என அஜித்திடம் ஸ்ரீதேவி கோரிக்கை வைத்திருந்தார். ஸ்ரீதேவி மறைந்த பின்னும் அந்த கோரிக்கையை அஜித் கடைபிடித்து தற்போது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார்.
அந்தப் படத்தின் ரஷ்ஷைப் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் போனி கபூர் டுவிட்டரில், “நேர் கொண்ட பார்வை’ படத்தின் ரஷ்ஷைப் பார்த்தேன். மகிழ்ச்சி. அஜித் அற்புதமாக நடித்திருக்கிறார். விரைவில் ஹிந்திப் படங்களில் நடிக்க அவர் சம்மதிப்பார் என நினைக்கிறேன். கைவசம் மூன்று ஆக்சன் கதைகளை வைத்திருக்கிறேன். குறைந்தபட்சம் ஒரு படத்திலாவது அவர் நடிக்க சம்மதிப்பார் என நினைக்கிறேன்,” என பதிவிட்டுள்ளார்.
2015ம் ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் டுவிட்டர் பக்கம் வந்திருக்கிறார் போனி கபூர். அவருடைய இந்தப் பதிவிற்கு 13 ஆயிரம் லைக்குகள் கிடைத்துவிட்டது. டுவிட்டரில் அவருக்குக் கிடைத்துள்ள அதிகபட்ச லைக்குகள் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீதேவியின் ஆசையை ‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் மூலம் நிறைவேற்றி வரும் அஜித், இப்போது போனி கபூர் ஆசையை நிறைவேற்ற ஹிந்திப் படத்தில் நாயகனாக நடிக்க சம்மதிப்பாரா
