
தமிழ் சினிமா வாய்ப்பு என்பது மிக கடினம் அப்படி அது கிடைத்தால் அதை ஒரு சிலர் மட்டுமே மிக சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்வார்கள் அப்படி தன்னை தானே மிகவும் செதுக்கி கொண்டவர் என்றால் அது யோகி பாபு தன் திறமையின் மூலம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுகிறார்
தமிழ்சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு, காமெடி ஜானரில் உருவாகும் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்
சமீபத்தில் யோகி பாபு நடித்த தர்மபிரபு படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் மே மாதம் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து கூர்கா, ஜாம்பி உள்ளிட்ட படங்களிலும் யோகி பாபு நாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது தான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார். இது அவரது திரைத்துறை பயணத்தில் அடுத்த அவதாரமாக பார்க்கப்படுகிறது
இயக்குகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வரும் என்று தயாரிப்பு நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஹீரோவாக ஒருசில படங்களில் நடித்து வந்தாலும் விஜய் 63, சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்
