
முனி படத்தின் 4வது தொடராக வெளியாகியுள்ள படம் காஞ்சனா 3 படம். இதில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, சத்யராஜ், கோவை சரளா, துவான் சிங், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்கி நடித்த லாரன்ஸ் தயாரிப்பிலும் கூட்டு சேர்ந்துள்ளார். ஏற்கனவே வந்த முனி பாகங்கள் தமிழ் மற்றும் தெலுங்க்கில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படத்தில் ராகவா லாரான்ஸ் ராகவா மற்றும் காளி என இரு வேடங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே வெளிவந்த படங்களை போன்று இந்த படத்திலும், பேய் மூலம் தனது நோக்கத்தை ஹீரோ நிறைவேற்றுகிறார். எப்படி பேய் தனக்கு எதிரானவர்களை பழிக்கு தீர்க்கிறது என்பதே படத்தின் கதையாகும்.
படத்தின் முதல் பாதி ஆக்ஷன், ஹரார், காமடி, கிளாமர், டான்ஸ், பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்கிறது. இண்டர்வேல் பிளாக் பகுதியில் வரும் காட்சிகள் ரசிகர்களை மனதை வருடும் வகையில் உள்ளது.
படத்தில் இடம் பெற்றுள்ள பிளாஸ்பேக் காட்சிகள் அதிக நேரம் வருவது ரசிகர்களை பொறுமையை சோதிக்கிறது. இருந்தபோதும், கோவை சரளாவின் காமடி காட்சிகள் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளையும் சிரிக்க வைக்கிறது.
படத்தில் பேய் வரும் காட்சிகளுக்கான விசுவல்கள் வியக்க வைக்கிறது. படத்தில் ஹீரோ, தனது தாத்தாவிடம் பிகர்-னா எங்கே? என்று கேட்பதும் அடுத்த சீனிலேயே ஓவியா, நான் கிளாமரா டிரஸ் போட்டு வந்துருக்கேனு சொல்லுறதும், வேதிகா நான் ஓவர் கிளாமரா வந்து இருக்கேன் பேசுற வசனங்களும் ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளுகிறது.
இந்த படத்தில் இடம்பெற்ற டூ பா டூ பாடல் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 1400 நடன கலைஞர்கள் பயன்படுத்தி வித்தியாசமாகவும், பிரமாண்டமாகவும் பாடல் உருவாக்கப்பட்டுள்ளதும் ரசிகர்களின் கைதட்டலை பெறுகிறது.
மொத்தத்தில் காஞ்சனா – 3 பேய் வெற்றி படமாக இருக்கும்.
